(எம்.எம்.சில்வெஸ்டர்)

கென்யாவில் ஆரம்பமான நைரோபி கிரிக்கெட் லீக் (என்.சி.எல்.) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஆறு பேர் பங்கேற்று வருகின்றனர்.

Sri Lankans in Nairobi

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான அஜந்த மெண்டிஸ், சாமர கப்புகெதர இருவருடன்  உதார ஜயசுந்தர, லஹிரு கமகே, கிஹான் ரூபசிங்க, விக்கும் சஞ்சய ஆகியோரும் இந்த இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகின்றனர்.

இதில் கிசுமு க்ரேன்ஸ் அணியின் ஆலோசகராக அஜந்த மெண்டிஸும், மொம்பாஸா ஈகள்ஸ் அணியின் ஆலோசகராக சமார கப்புகெதரவும் செயற்படுகின்றனர்.  

நாக்குரு பிளேமிங்கோஸ் அணிக்காக உர ஜயசுந்தரவும், எல்டொரட் ஹோக்ஸ் அணிக்காக லஹிரு கமகேவும், நைரோபி ஹோர்ன்பில்ஸ் அணிக்காக கிஹான் ரூபசிங்கவும், மசாகொஸ் வுல்டர்ஸ் அணிக்கா விக்கும் சஞ்சயவும் விளையாட ஒப்பந்தமாகியுள்ளனர். 

6 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரானது கடந்த புதனன்று ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.