( எம்.எப்.எம்.பஸீர்)
ஆபாச இணையத் தளம் ஒன்றினை நடாத்திச் சென்று, பாலியல் நடவடிக்கைகளுக்காக சிறுமிகள், பெண்களின் புகைப்படங்களை விளம்பரம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.கே. சேனாரத்ன தலைமையிலான பொலிஸ் குழு சந்தேக நபரைக் கைது செய்தது.
15 வயதான சிறுமி ஒருவர், இணையத் தளம் ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்த விவகாரத்தில், சிறுமிகள், பெண்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யும் வலையமைப்பு தொடர்பில் தீவிர விசாரணைகள் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சர் தர்ஷிகா குமாரின் நேரடி கட்டுப்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான மேலதிக உதவிகளையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் டிஜிட்டல் பகுப்பாய்வுப் பிரிவு ஊடாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன் பிரகாரம் அடையாளம் காணப்பட்ட ஆபச இணையத் தளம் ஒன்றினை நடாத்தி சென்ற இரத்தினபுரி, கலவானை - தவுலகல பகுதியைச் சேர்ந்த 29 வயதான களுபோவிலகே சுரேஷ் தர்ஷன களுபோவில என்பவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேக நபர் இன்று கொழும்பு மேலதிக நீதிவான் பண்டார நெலும்தெனிய முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
சந்தேக நபர் முன்னெடுத்து சென்ற ஆபாச இணையத்தளத்தில் அதிகமான சிறுமிகள், பெண்களின் புகைப்படங்கள் விளம்பரபப்டுத்தப்பட்டிருந்ததாக சந்தேக நபரை மன்றில் ஆஜர் செய்து சி.ஐ.டி.யினரால் மன்றுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் 15 வயதான சிறுமி ஒருவர், இணையத்தளம் ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்த விவகாரத்தில், இதுவரை 46 சந்தேக நபர்கள் கைதுச் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM