ஆப்கானிஸ்தானின் சமீபத்திய  நிலைமைகள் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தஜிகிஸ்தானின் அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

ஆப்கானிஸ்தானை  தலிபான்கள் கையகப்படுத்திய பின்னர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்  முக்கிய கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த போது  அமைச்சர் ஜெய்சங்கர், தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மோனை சந்தித்தார்.

இரு தரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் ஆப்கானிஸ்தான் நிலைமைகள் உள்ளிட்ட பிராந்திய விடயங்கள் குறித்து தஜிகிஸ்தான் ஜனாதிபதியுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்  தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவும் தஜிகிஸ்தானும் வலுவான பங்காளிகள் என்றும் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரஷ்யா மற்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர்களையும் சந்தித்தார். இதே வேளை ஆப்கானிஸ்தானின் முன்னேற்றங்கள் மற்றும் ஒட்டுமொத்த பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலைகள் குறித்து ஷாங்காய் ஒத்துழைப்பு  மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதுடன இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கபதனுக்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.