கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் சென்.கைட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியட்ஸ் சம்பியன்

Published By: Digital Desk 2

17 Sep, 2021 | 05:55 PM
image

 எம்.எம்.சில்வெஸ்டர்

கரீபியன் பிரீமியர் லீக்கின் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் சென் லூசியா கிங்ஸ் அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் டொமினிக் டிரேக்ஸின் அதிரடியான துடுப்பாட்டம் கைகொடுக்க சென்.கைட்ஸ் அண்ட் நெவிஸ்  பேட்ரியட்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி சம்பயின் பட்டத்தை வென்றது. 

கடந்த புதனன்று இரவு நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென். லூசியா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது. 

அவ்வணி சார்பில் ரஹ்கீம் கோர்ன்வல் 32 பந்துகளில் 43 ஓட்டங்களையும், ரோஸ்டன் சேஸ் 40 பந்துகளில் 43 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர்.  

எனினும், இறுதிக் கட்டத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய கீமோ போல் 5 சிக்ஸர்களை விளாசி 21 பந்துகளில் 39 ஓட்டங்களை அதிரடியாக குவித்தார். பந்துவீச்சில் பவாட் அஹமட், நஸீம் ஷா இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

160 ஓட்டங்களை  நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்.கைட்ஸ் அணி  20 ஆவரின் கடைசிப் பந்தில் வெற்றி இலக்கை அடைந்து 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. 

அவ்வணியின் டொமினிக் டிரேக்ஸ் 24 பந்துகளில் 3 சிஸ்சர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களை பெற்று சென்.கைட்ஸ் அணியை முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை வெல்ல காரணமாக அமைந்ததுடன் இறுதிப் போட்டியின் நாயகனாகவும் தெரிவானார். 

போட்டித் தொடரின் நாயகனாக சென். லூசியா அணியின் ரோஸ்டன் சேஸ் தெரிவானார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41