GOOD BYE யோக்கர் கிங்

Published By: Digital Desk 2

17 Sep, 2021 | 06:14 PM
image

குமார் சுகுணா 

“ஹேப்பி ரிட்­டை­யர்மெண்ட், யோர்க்கர் கிங்” என்று ஐ.சி.­சி.யே தன் வாழ்த்துச் செய்­தியில்  புகழ்ந்து பிரி­யா­வி­டை­ய­ளித்­துள்­ளது இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து வீச்­சாளர் லசித் மலிங்­கவை.

ஆம் ,  அனைத்­து­வி­த­மான கிரிக்கெட் போட்­டி­க­ளி­லி­ருந்தும் ஓய்வு பெறு­வ­தாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலை­சி­றந்த பந்து வீச்­சா­ளர்­களில் ஒரு­வ­ரான  லசித் மலிங்க நேற்­று­முன்­தினம் அறி­வித்தார்.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்­டி­க­ளி­லி­ருந்து ஏற்­க­னவே ஓய்வு பெற்­றி­ருந்த மலிங்கா, டி20 போட்­டி­களில் விளை­யாடி வந்தார். எனினும், தென்­னாப்­ரிக்­கா­வுக்கு எதி­ரான தொடரில் அவர் சேர்க்­கப்­ப­ட­வில்லை. இந்த நிலையில், டி20 உட்­பட அனைத்­து­வி­த­மான போட்­டி­க­ளி­லி­ருந்தும் ஓய்வு பெறு­வ­தாக மலிங்க அறி­வித்­துள்ளார். 

தனது அதி­ரடி யோர்க்­கர்­களால் எதி­ரணி துடுப்பாட்ட வீரர்களை நிலை­கு­லையச் செய்த மலிங்க, ஐ.பி.எல். தொடரில் அதிக விக்­கெட்­களை வீழ்த்தி, முத­லி­டத்தில் உள்ளார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

லசித் மலிங்­கவின் பந்து வீச்சு மற்­றும் அன்றி அவரது தலை­மு­டிக்கும் உலகம் முழு­வதும் ஏரா­ள­மாக கிரிக்கெட் ரசி­கர்கள் உள்­ளனர். இலங்கை அணியின் தலை­சி­றந்த பந்து வீச்­சா­ளர்­களில் ஒரு­வ­ரான லசித் மலிங்க அனைத்து வகை­யான சர்­வ­தேச கிரிக்­கெட்டில் இருந்தும் ஓய்வு பெறு­வ­தாக அறி­வித்­துள்ளார். அவ­ரது துல்­லி­ய­மான யோர்க்­கர்களால் எதிரே நிற்கும் துடு­பாட்ட வீரர்­களை  திக்­கு­முக்­காட செய்­தவர்.

அதுவும் குறிப்­பாக எதி­ரணி துடுப்பாட்ட வீரர்களின் ஓட்­டங்­களை கட்­டுப்­ப­டுத்த  முனையும் தற்போதைய யோர்க்­கர்­க­ளுக்கு மலிங்க தான் தொடக்­கப்­புள்ளி என்று கூறலாம். 2007 மற்றும் 2011 -ஆண்டுகளில்  50 ஓவர் உலகக் கோப்­பையில் இலங்கை அணி இறுதி போட்டி வரை முன்­னேற மலிங்­கவும் ஒரு காரணம்.

30 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 84 டி20 போட்­டி­களில் இலங்கை அணிக்­காக விளை­யாடி உள்ளார். கடை­சி­யாக இலங்கை அணிக்­காக 2020 மார்ச்சில் அவர் விளை­யாடி இருந்தார். டி20 தொடரில் இருந்து வில­கி­யதன் மூலம் அனைத்து வகை கிரிக்கெட் போட்­டி­க­ளி­லி­ருந்தும் ஓய்வு பெற்றுள்ளார் மலிங்க.

2007 உலகக் கோப்­பையில் நான்கு பந்­து­களில் நான்கு விக்­கெட்­டு­களை சாய்த்து சாதனை படைத்­தவர். சர்­வ­தேச டி20 கிரிக்­கெட்டில் 100 விக்­கெட்­டு­களை கைப்­பற்­றிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாத­னைக்கு சொந்­தக்­காரர் ஆவர். ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்­காக மலிங்க விளை­யாடி உள்ளார்.

 கிரிக்கெட் உல­கி­லேயே விநோ­த­மான ஒரு பந்துவீச்சு பாணி உடை­யவர் என்றால் மலிங்­கதான், குறிப்­பாக வேக­பந்து வீச்சில். மேற்கு இந்­திய தீவு­களில் முன்பு கிளார்க் என்ற ஒரு பந்துவீச்சாளர் இருந்தார், இவர் வலது கை வீச்­சா­ளர்தான் ஆனால் பந்து வீசி முடிக்கும் போது இடது கால் முன்னே வராமல் வலது கால் முன்னே வர வீசுவார், அப்­போது அது பெரிய விடயம். பிறகு மலிங்­கதான்.இவரது பாணிதான் உலகளவில் பிரசித்தம்.

டி20 துடு­பாட்­டத்தில் எப்­படி கிறிஸ் கெய்லை அடித்துக் கொள்ள முடி­யாதோ டி20  பந்­து­வீச்சில் முடி­சூடா மன்னன் மலிங்க என்று தயங்­காமல் கூற முடியும். ஐ.சி.­சி.யே தன் வாழ்த்துச் செய்­தியில், “ஹேப்பி ரிட்­டை­யர்மெண்ட், .யோர்க்கர் கிங்” என்று புகழ்ந்துள்­ளது.

மும்பை இந்­தியன்ஸ் 5 முறை கோப்­பையை வெல்ல 4 முறை கார­ண­மாக இருந்தவர் மலிங்­க­தான்.லசித் மலிங்க தனது விடுப்பை அறி­வித்­த­தை­ய­டுத்து அவ­ருடன் விளையாடிய சக வீரர்கள் அவ­ருக்கு வாழ்த்துதெரிவித்துள்ளனர். பும்­ரா­வ் மலிங்­கவை வாழ்த்­தி­யுள்ளார்.

“உதா­ர­ண­மாகத் திகழும் உங்கள் கிரிகெட் வாழ்க்­கைக்கு வாழ்த்­துக்கள். மலி உங்கள் அனைத்து எதிர்­கால திட்­டங்­க­ளுக்கும் வாழ்த்­துக்கள். உங்­க­ளுடன் விளை­யா­டி­யது இனிமை மகிழ்ச்சி” என்று பும்ரா தெரி­வித்­துள்ளார். மும்பை இந்­தியன்ஸ் ‘அனைத்து நினை­வு­க­ளுக்கும் நன்றி மலிங்க” என்று புகழ்ந்­துள்­ளது.

122 ஐ.பி.எல். போட்­டி­களில் மலிங்க 170 விக்­கெட்­டு­களைக் கைப்­பற்­றி­யுள்ளார். இதில் ஒரு­முறை 5/13 என்று வீழ்த்­தி­யது சிறந்த பந்து வீச்சு. இலங்­கைக்­காக 546 விக்­கெட்­டு­களை அனைத்து வடி­வங்­க­ளிலும் கைப்­பற்­றினார். 2007 உல­கக்­கோப்­பையில் இவ­ரது பந்து வீச்­சினால் இலங்கை இறு­தியில் விளை­யா­டி­யது, 2011 உல­கக்­கோப்­பை­யிலும் இவ­ரது பங்­க­ளிப்பு ஏராளம், 2014 டி20 உல­கக்­கோப்­பையில் இலங்­கையின் வெற்றி தலைவனும் மலிங்­கதான்.

மஹேலஜெய­வர்­தன கூறும்­போது, “உன்னை முதன் முத­லாக 18 வயது பந்­து­வீச்­சா­ள­ராக  வலையில் சந்­தித்­தது முதல் நிறைய ஆச்­ச­ரி­ய­க­ர­மான நினை­வு­களை விட்டுச் சென்­றுள்ளாய், நன்றி” என்று வாழ்த்து தெரி­வித்­துள்ளார். இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் அனை­வ­ருக்­குமே மலிங்க மறக்க முடி­யாத பல நினை­வு­களை விட்­டுச்­சென்­றுள்ளார் என்றே கூற வேண்டும்.

யுத்தம், இன­ பிரச்சினை என்ற முட் செடி­க­ளுக்கு இடையே வளர்ந்து விருட்­ச­மா­ன­துதான் இலங்கை கிரிக்கெட். பல துய­ரங்­க­ளுக்கு மத்தியில் சர்வதேச ரீதியில் பல சாதனைகளை இலங்கை வீரர்கள் சாதித்துள்ளனர். சனத்,சங்ககார, முரளி ,மஹேல போல மகத்தான வீர்களில் மலிங்கவும் ஒருவர். இவர்களின் வெற்றிடங்கள் இலங்கை கிரிக்கெட்டில் அத்தனை எளிதாக நிரப்ப முடியாது என்பதே உண்மை. நாட்டுக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான பல நினைவுகளையும் பெருமையையும் தந்த மலிங்கவை நாமும் வாழ்த்தி விடை கொடுப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22