'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கை நடைமுறையில் பின்பற்றப்படவில்லை - ஜே.சி.அலவத்துவல

Published By: Gayathri

17 Sep, 2021 | 06:53 PM
image

(நா.தனுஜா)

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிராக முறைப்பாடின்றி நடவடிக்கை எடுக்கமுடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் பொலிஸ் பேச்சாளரும் கூறுகின்றார்கள். 

ஆனால் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவேற்றம் செய்தவர்களுக்கு எதிராகவும் தமது உரிமைகளைக்கோரி அமைதிவழிப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் எவ்வித முறைப்பாடுகளுமின்றி பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதிலிருந்து 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கை நடைமுறையில் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல சுட்டிக்காட்டினார்.

அத்தோடு ஏற்கனவே ஐ.நா மனித உரிமைகள் பேரவை, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச கட்டமைப்புக்கள் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்துவருகின்ற சூழ்நிலையில், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது நாட்டிற்கு மேலும் பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் மற்றும் முறையற்ற நிர்வாகத்தின் விளைவாகவே அனைத்துத் துறைகளிலும் நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் நிலையேற்பட்டிருக்கின்றது. 

குறிப்பாக எமது அண்மைய நாடுகளான இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியிலும் அவற்றின் பொருளாதாரத்தை சிறப்பாக நிர்வகிக்கின்றன. 

ஆனால் எமது நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாள்வதில் அரசாங்கம் தோல்வியடைந்திருக்கின்றது.

அதேபோன்று நாட்டில் மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலைவரங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்துபோயுள்ளமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அண்மையில்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மனித உரிமைகள் தொடர்பில் எமது நாட்டின்மீது முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை மையப்படுத்தியவையாகவே அமைந்துள்ளன.

அதுமாத்திரமன்றி ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையையும் இழக்கக்கூடிய அபாயத்தில் இலங்கை இருக்கின்ற சூழ்நிலையில், அதுகுறித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக ஐரோப்பியப் பாராளுமன்றக்குழு இலங்கை வரவிருக்கின்றது. 

இவ்வாறானதொரு பின்னணியில் சிறைச்சாலைகள் விவகாரத்திற்குப் பொறுப்பாக இருந்த இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலைகளுக்குள் அத்துமீறி நுழைந்து குற்றவியல் சட்டக்கோவையை மீறும்வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றார்.

ஏற்கனவே எமது நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்பதுடன் அதுகுறித்து விசாரணைகளையும் முன்னெடுத்துவருகின்ற சூழ்நிலையில், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் அதன் விளைவுகள் மிகவும் மோசமானவையாகவே இருக்கும். 

அதனால் அரசாங்கத்திற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது. மாறாக அனைத்து நெருக்கடிகளையும் பொதுமக்களே எதிர்கொள்ளவேண்டியிருக்கும். 

எனவே அண்மையில் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 

அவர் சிறைச்சாலைகள் விவகாரம் தொடர்பான இராஜாங்க அமைச்சுப்பதவியிலிருந்து இராஜினாமா செய்திருக்கின்றாரே தவிர, இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சுப்பதவியைத் தொடர்ந்தும் வகிக்கின்றார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்ப்புக்களுக்கு மத்தியிலேயே அஜித் மன்னம்பெருமவுக்கு வேட்புமனுவில்...

2024-10-13 19:23:56
news-image

ஐக்கிய மாதர் சக்தியின் தேசிய அமைப்பாளர்...

2024-10-14 02:42:39
news-image

இந்த மண்ணில் தமிழரசுக்கட்சியினால்தான் தமிழ் மக்கள்...

2024-10-14 02:23:21
news-image

யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழரசு...

2024-10-14 02:07:52
news-image

முக்கியமான தீர்மானங்களின் போது நபர்கள் தொடர்பில்...

2024-10-14 01:58:57
news-image

கொழும்பில் பிரபல வர்த்தகர் ரணில் விலத்தரகே...

2024-10-14 01:41:54
news-image

தேர்தல் செலவு அறிக்கையை கையளிக்காத ஜனாதிபதி...

2024-10-13 23:39:33
news-image

தேர்தலில் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும்...

2024-10-13 19:23:46
news-image

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு; இளைஞன் படுகாயம்

2024-10-13 19:17:35
news-image

சீரற்ற காலநிலை – கொழும்பு கம்பஹா...

2024-10-13 18:48:40
news-image

களுவாஞ்சிக்குடியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில்...

2024-10-13 18:37:55
news-image

அம்பாறையில் தமிழ் மக்களின் வாக்கினை சிதைக்க...

2024-10-13 18:58:57