ஜம்மு - காஷ்மீர் விவசாயத் துறையை ஊக்குவிக்க மத்திய அரசிடம் 800 கோடி ரூபா கோரிக்கை

By T Yuwaraj

17 Sep, 2021 | 05:48 PM
image

(ஏ.என்.ஐ)

ஜம்மு -காஷ்மீர் விவசாய துறையை ஊக்குவிக்க 800 கோடி ரூபாவை மத்திய அரசிடம் கோரியுள்ளதுடன் , சிறு தோட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளை உருவாக்க தேவையான ஒத்துழைப்புகள் மத்திய அரச வழங்க உள்ளதாகவும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா குறிப்பிட்டார்.

ஜம்மு -காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா புதுடெல்லி - விக்யான் பவனில் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயத் துறை குறித்த மாநாட்டில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய லெப்டினன்ட் கவர்னர், நீடித்த மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியின் பாதையில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளை பற்றியும் ஜம்மு - காஷ்மீரின் முன்னோற்ற நிலைமைகளை பகிர்ந்து கொண்டார்.

தேசிய இலக்குகளுக்கு ஏற்ப விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதாரத்தை விரைவுபடுத்தவும் , விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளின் பங்களிப்பை மேம்படுத்த சிறப்பான சூழல் காணப்படுவதாக குறிப்பிட்டார்.

ஜம்மு - காஷ்மீரில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளின் வளர்ச்சியை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை ஆதரிப்பதற்காக தாராளவாத நிதி உதவியை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு  கவர்னர் நன்றியைத் தெரிவித்தார்.

முதல் முறையாக, 2000 க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் நாடு முழுவதும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீரின்  தோட்டக்கலை விளைபொருட்களின் பழச்சந்தையை உறுதிப்படுத்துவதற்கும், ஆண்டு முழுவதும் ஆப்பிள் போன்ற பழங்களை நல்ல விலைக்கு விற்பதை உறுதி செய்வதற்கும் மேம்பட்ட கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இதன் போது தெரிவித்தார்.

கடந்த ஒரு வருடத்தில் 40,000 மெட்ரிக் தொன் சேமிப்பு களஞ்சியப்படுத்தப்பட்டது. மேலும், 35,000 மெட்ரிக் தொன் சேமிப்பு திறன் கொண்ட களஞ்சியசாலை கட்டுமானத்தில் உள்ளது.

இங்கு மேலும் விவசாய தறையை ஊக்குவிக்க 800 கோடி ரூபாவை மத்திய அரசிடம் கோரினார்.  மேலும் சிறு தோட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாய்களை உருவாக்க தேவையான ஒத்துழைப்புகள் மத்திய அரச வழங்க உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right