ஆகாயத்தில் இசையமைத்த ஹாரீஸ்

Published By: Robert

15 Sep, 2016 | 11:26 AM
image

நடிகர் விக்ரம் நடித்த படத்திற்காக சென்னையிலிருந்து ஜேர்மனி செல்லும் விமான பயணத்தின் போது இசையமைத்ததாக ருசிகர தகவல் ஒன்றை தெரிவித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ்.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,

எம்முடைய நண்பர் ஒளிப்பதிவாளர் ராஜசேகரின் பரிந்துரையின் பேரில் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கிய அரிமா நம்பி என்ற படத்தை பார்த்தேன். அப்போதே இயக்குநர் மீது எமக்கு ஒரு புரிதல் இருந்தது. அதனையடுத்து அதே ராஜசேகரின் சிபாரிசில் தயாரிப்பாளர் தமீன்ஸ் எம்மை சந்தித்தார். அவர் எம்மைச் சந்திக்கும் போது கடும் நெருக்கடியில் இருந்தார். அப்போது நான் அவரிடம் நீங்கள் இப்போது தான் இப்படி உணர்கிறீர்கள். இருமுகன் என்ற இந்த படம் முடிவடைந்து வெளியாகும் தருவாயில் நீங்கள் சந்தோஷமாக உணர்வீர்கள் என்று நம்பிக்கையுடன் பேசினேன். பேசிவிட்டு எம்முடைய பணிகளை கவனிக்கத் தொடங்கினேன்.

பிறகு இரண்டு நாள் கழித்து நான் எம்முடைய இசைக்குழுவிற்காக இசைக்கருவினை வாங்குவதற்காக ஜேர்மனி செல்ல தீர்மானித்து விமான நிலையத்திற்கு பயணமாவதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தேன் அப்போது இயக்குநர் ஆனந்த் சங்கரும், தயாரிப்பாளர் தமீன்ஸும்  எம்மை தொடர்பு கொண்டு சார் ஒரு டீஸர் வெளியிடவேண்டும். ஒத்துழைப்பு கொடுங்கள் என்று கேட்க, நான் மறுக்க, அவர் எம்மிடமே எம்முடைய வார்த்தைகளை திருப்பி சொல்ல, வேறு வழியில்லாமல் விமானத்திலேயே அந்த டீஸருக்கான பணிகளை மேற்கொண்டேன். ஏறத்தாழ பத்தரை மணி நேர உழைப்பில் அந்த டீஸர் தயாரானது. இதுவரை யாரும் ஒரு படத்திற்காக ஆகாயத்தில் பறந்த படியே பணியாற்றியிருக்கமாட்டார்கள். இதை நான் இருமுகனுக்காக செய்தேன். என்றார்.

இருமுகன் வெளியான முதல் வாரத்தில் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் 60 கோடி ரூபாய் மேல் வசூலாகியுள்ளதாக படத்தை வெளியிட்ட நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தகவல் : சென்னை அலுவலகம் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37