கடந்த ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 31 திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் இறுதி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

2,180 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற மேற்படி பரீட்சையில் 309,069 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.

பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை www.doenets.lk  மற்றும் www.exams.gov.lk ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.