உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் : இப்ராஹிம் குடும்பத்திற்கு சொந்தமான செப்பு கைத்தொழிற்சாலை கைத்தொழில் அபிவிருத்திசபை வசம் : விமல் வீரவன்ச

Published By: Digital Desk 2

17 Sep, 2021 | 06:20 PM
image

இராஜதுரை ஹஷான்


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இப்ராஹிம் குடும்பத்தினருக்கு சொந்தமான செப்பு கைத்தொழிற்சாலையை அமைச்சரவை அங்கிகாரத்துடன் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு கீழ் கொண்டு வரவும், செப்பு கைத்தொழிலுக்கு தேவையான  பொருட்களை விநியோகிக்கும் நிலையமாக மாற்றியமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.


வெல்லம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள இப்ராஹிம் குடும்பத்தினருக்கு சொந்தான செப்பு கைத்தொழிற்சாலையை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.




 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,


 ஏப்ரல் 21 குண்டுத்தாக்கதலுடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இந்த செப்பு கைத்தொழிற்சாலை கடந்த மே மாதம் 20ஆம் திகதி அரசுடமையாக்கப்பட்டது.

அரசுடமையாக்கப்படுவதற்கு முன்னர் இப்ராஹிம் குடும்பத்தினரது சொத்தாக இத் தொழிற்சாலை காணப்பட்டது.


அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக இக்கைத்தொழிற்சாலையின் ஒரு  பகுதியை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கீழ் கொண்டு வர எதிர்பார்த்துள்ளோம்.

அத்துடன் செப்பு கைத்தொழிலுக்கு தேவையான பொருட்களை இக்கைத்தொழிற்சாலையில் இருந்து விநியோகிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.









முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18