எம்.மனோசித்ரா
சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சிறைச்சாலைகள் சம்பவத்தை போன்ற எந்தவொரு செயற்பாட்டையும் அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது.
சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் செயற்பாடுகள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தவறிழைக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு , உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் தீர்மானங்கள் எடுக்கப்படும்.
எவ்வாறிருப்பினும் இவ்வாறான சம்பவங்களை நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்பதை தெளிவாகக் கூறிக் கொள்கின்றோம்.
இதனை நாம் கண்டிப்பதோடு மாத்திரமின்றி , சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.
இது எதிர்க்கட்சியினால் உருவாக்கப்பட்ட பேசுபொருளா அல்லது எதிர்க்கட்சியால் பேசு பொருளாக்கப்பட்டதா என்பது விசாரணைகளின் பின்னரே வெளிப்படுத்தப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM