பாராளுமன்றத்தால் 100 கோடி ரூபா இலாபம் !

By Digital Desk 2

17 Sep, 2021 | 03:33 PM
image

எம்.ஆர்.எம்.வசீம்

கொவிட் தொற்று நிலைமை காரணமாக பாராளுமன்றத்தில் பல்வேறு நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டதன் மூலம் செலவுகள் குறைவடைந்துள்ளன.

இதன் காரணமாக நூறு கோடி ரூபாவரை இதுவரை மீதமாகி இருக்கின்றது என பாராளுமன்ற உள்ளக வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் பாராளுமன்றத்தில் இடம்பெறும் பல்வேறு செயற்குழு கூட்டங்கள் வரையறுக்கப்பட்டமை அல்லது இடம்பெறாமை, உணவு விநியோகம் பாராளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறும் தினத்துக்கு மாத்திரம் வரையறை செய்தமை மற்றும் பாராளுமன்ற ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தியமை போன்ற காரணங்களால் இவ்வாறு பாராளுமன்ற செலவுகள் குறைவடைந்திருப்பதாக பாராளுமன்ற அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

மேலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் வரையறுக்கப்பட்டமை மற்றும் பாராளுமன்ற ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தியதனால் நீர், மின்சாரம், போக்குவரத்து போன்ற வசதிகளுக்காக செவாகும் நிதி பாரியளவில் குறைவடைந்திருக்கின்றது.

அத்துடன் இந்த காலப்பகுதியில் குளிரூட்டி இயந்திரங்கள் செயற்படுத்தப்படாமல் இருப்பதால் பாரியளவில் நிதி நன்மை கிடைத்திருப்பதாகவும் குறித்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right