(எம்.எம்.சில்‍வெஸ்டர் )

99 ஆவது ‍தேசிய மெய்வல்லுநர் விளையாட்டு விழா அடுத்த மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம்  திகதிகளில் நடத்த இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தீர்மானித்துள்ளது.

தேசிய மெய்வல்லுநர் போட்டியின் முதற் கட்டப் போட்டிகள் இவ்வருட மே மாதத்தில் நடைபெற்றிருந்த நிலையில், இரண்டாம் கட்டப் போட்டிகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும் நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சுறுத்தலால் காரணமாக இதன் இரண்டாம் கட்டப் போட்டிகள் பிற்போடப்பட்டன. 

இந்நிலையில், தற்போது தேசிய மெய்வல்லுநர் போட்டியின் இரண்டாம் கட்டப் போட்டிகளை அடுத்த மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் நடத்த இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு நொவம்பர் மாதத்தில் ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டி நடைபெறவுள்ளதால், இந்தப் போட்டிக்கு வீரர்களை தெரிவு ‍செய்வதற்கான தகுதிகாண் போட்டிகளை நடத்தவும் இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தீர்மானித்துள்ளது.