(எம்.மனோசித்ரா)

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வெலிக்கடை பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 7 கிலோகிராம் கேரளகஞ்சா, 208 கிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் பெற்றுக் கொண்டதாக சந்தேகிக்கப்படும் 118,570 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் இரண்டுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதுடைய ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.