தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு !

Published By: Digital Desk 3

18 Sep, 2021 | 08:30 AM
image

நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் ஒக்டோபர்  மாதம் முதலாம் திகதி  வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி அமுல் படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு படிப்படியாக நீடிக்கப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் திங்கட் கிழமை (21) தளர்த்தப்படவிருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு, கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று (17) காலை இடம்பெற்ற கொவிட் ஒழிப்பு செயலணி கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையில் உள்ள காலத்தில் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொவிட் 19வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமைகளில் தற்போது நாட்டில் வேகமாக பரவிக்கொண்டுள்ள டெல்டா வைரஸ் தொற்று காரணமாக  ஏற்பட்டுள்ள அபாயகர நிலைமைகள் குறித்து சுகாதார வைத்திய நிபுணர்கள் தொடர்ச்சியாக அவதானப்படுத்தி வருகின்ற நிலையில், நாடு தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை வலயத்தில் உள்ளதாகவும், நாளாந்த வைரஸ் தொற்றுகள் குறைந்தாலும் கூட வைரஸ் தொற்றுப்பரவல் அச்சுறுத்தல் நிலைமை இன்னும் நீங்கவில்லை என நேரடியாக கொவிட் செயலணிக்கு சுட்டிக்காட்டியிருந்தனர்.

இறுதியாக செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி கூடிய கொவிட் செயலணிக்கூட்டத்தின் போதும் நாட்டின் அச்சுறுத்தல் நிலைமைகள் மற்றும் சுகாதார கட்டுப்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ சுகாதார பணிப்பாளரிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதற்கமைய கடந்த வாரத்தில் சுகாதார தரப்பினர் தமது பரிந்துரைகளை சுகாதார பணிப்பாளரிடம் ஒப்படைந்திருந்ததுடன் இறுதியா கடந்த வியாழக்கிழமை சுகாதார்ஸ் அமைச்சில் முக்கிய கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தனர்.

சுகாதார அமைச்சில் நேற்று முன்தினம் கூடிய முக்கிய ஆலோசனை கூட்டம்

 நாட்டின் சுகாதார கட்டமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பது குறித்து சுகாதார வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார பணிப்பாளர் ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இறுக்கமான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், பொதுப் போக்குவரத்து பயன்பாடுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுகாதார வைத்திய தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேபோல் நாடு ஒக்டோபர் மாதம் வரையில் முடக்கப்படல் வேண்டும் என்ற இலங்கை வைத்தியர்கள் சங்கம், பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் ஆகியவற்றின் பரிந்துரைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோருக்கு விமான நிலையத்திலேயே பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுத்து மூன்று மணித்தியாலத்தில் வீடுகளுக்குஅனுப்பும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 கொவிட் கட்டுப்பாட்டு செயலணிக்கூட்டத்தில்

இந்நிலையில் நாட்டை கொவிட் வைரஸ் பரவல் நிலைமைகள், கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வைத்திய தரப்பின் பரிந்துரைகளை ஆராயும் விதமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவின் தலைமையில் கொவிட் கட்டுப்பாட்டு செயலணிக்கூட்டம்  கூடியது.

டெல்டா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமைகள் குறித்த சுகாதார தரப்பின் தொடர்ச்சியான வலியுறுத்தல், மற்றும் ஒக்டோபர் முதலாம் வாரம் வரையில் கண்டிப்பாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட வேண்டும் என்ற சுகாதார தரப்பின் கோரிக்கைகள் குறித்து சுகாதார பணிப்பாளர் முன்வைத்துள்ள அறிக்கையை ஆராய்ந்தே  தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி வரையில் நீடிக்க கொவிட் செயலணிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

நாட்டின் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனிமைப்படுத்தல் ஊரடங்கை ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி வரையில் நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் நாட்டின் அத்தியாவசிய  தேவைகளுக்காக நாடு இயங்கும், நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அத்தியாவசிய தேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் மக்கள் தத்தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் சுகாதார வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி செயற்பட வேண்டும். தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொவிட் செயலணிக் கூட்டத்தின் தீர்மானம் குறித்து செயலணியின் பிரதானி இராணுவத்தளபதி சவேந்திர சில்வா கூறுகையில்,

தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி வரையில் நீட்டிக்க செயலணிக் கூட்டத்தில் ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தடுப்பூசி ஏற்றப்படும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தவும், 15-19 வயதிற்கு உற்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஜனாதிபதி சுகாதார தரப்பிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும் இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மற்றும் காணி பதிவு திணைக்களம் ஆகியவற்றில் சேவைகளை மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களுடனேனும் முன்னெடுக்க பணிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும். அனுமதியுடன் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துகள் முன்னெடுக்கப்படும், விரைவில் சுகாதார் வழிகாட்டி ஒன்றினை வெளியிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04