சர்ச்சையை ஏற்படுத்திய கடிதம்! மாவையும் சிவஞானமும் கையை விரித்தனர் : சிறிதரனுக்கு சென்ற கடிதம்

Published By: Digital Desk 3

17 Sep, 2021 | 08:57 AM
image

(ஆர்.ராம்)

‘தமிழ்த் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள்’ என்ற தலைப்பிடப்பிடப்பட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடருக்காக தமிழரசுக்கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட மேயர் ஆகியோர் கையொப்பமிட்ட கடிதமொன்று  வெளியாகியிருந்தது.

இந்தக்கடிதம் அனுப்பப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் சர்ச்சைகள் இன்னமும் நீடிக்கின்ற நிலையில் குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டவர்களிடத்தில் விளக்கம் கோரப்பட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கத்திடமிருந்து நேற்று முன்தினமும் நேற்றும் சமூக ஊடக செயலி மற்றும் மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பபட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றையதினம் கடிதம் கிடைக்கப்பெற்றவர்கள் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் சிரேஷ்ட உபதலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “எம்மிடத்தில் விளக்கம் கோரும் தீர்மானம் எப்போது எடுக்கப்பட்டது” கேள்வி எழுப்பியுள்னர்.

இதன்போது, அவ்விருவரும் ‘அவ்விதமான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை’ என்று பதிலளித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா ‘கடிதம் அனுப்பபட்டுள்ளதா என்று ஆச்சரியமாகக் கேள்வி எழுப்பியுள்ளதோடு இந்த விடயங்களை மத்திய குழுவில் பேசுவோம். நீங்கள் பதிலளிக்க வேண்டியதில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், ஒழுக்காற்றுக்குழுவின் தலைவராக இருக்கும் சீ.வி.கே.சிவஞானத்திடம் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த உறுப்பினர்கள் இவ்விடயம் சம்பந்தமாக கேள்வி எழுப்பியபோதும் ‘தீர்மானமாக எதுவும் எடுக்கப்படவில்லை’ என்றே பதிலளித்துள்ளதோடு மத்திய குழுவில் இவ்விடயங்களை பேசுவோம் அவசரப்பட்டு பதில்களை வழங்க வேண்டாம் என்று உறுப்பினர்களிடத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும், கடந்த 10 ஆம் திகதி இலங்கைத்தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் அதில் பங்கேற்ற தலைவர் மாவை உள்ளிட்டவர்கள் குறித்த கடிதம் பற்றிய தெளிவுபடுத்தலொன்றை பெற வேண்டும் என்று கலந்தாலோசித்ததாக தெரியவருகின்றது.

இந்நிலையில், கட்சியின் தலைவரும் சிரேஷ்ட உபதலைவரும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று கூறும் நிலையில் பதில் பொதுச்செயலாளர் எவ்வாறு கடிதம் அனுப்பினார் என்ற விடயம் தற்போது கடிதத்தினைப் பெற்றுக்கொண்டவர்களின் கேள்வியாகவுள்ளது.

இதேநேரம், ஏற்கனவே சிறிதரன் தவிர்ந்த எண்மருக்கு தெளிவுபடுத்தும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் சிறிதரனுக்கும் அக்கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38
news-image

நாராஹேன்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

2025-03-20 17:44:18
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 107...

2025-03-20 17:28:45
news-image

யாழில் அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக...

2025-03-20 17:40:56
news-image

கராபிட்டிய வைத்தியசாலையில் கதிரியல் சிகிச்சைகள் ஸ்தம்பிதம்

2025-03-20 17:39:42
news-image

அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-20 17:28:26
news-image

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி வேட்பு...

2025-03-20 17:39:18
news-image

அலோசியஸிடமிருந்து நிதிபெற்ற அரசியல்வாதிகளின் பட்டியல் விரைவில்...

2025-03-20 15:19:36
news-image

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார்...

2025-03-20 16:52:31
news-image

நுவரெலியா மாவட்டத்தில் வேட்பு மனுவை தாக்கல்...

2025-03-20 17:42:10