தமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை 

16 Sep, 2021 | 10:44 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த அரசியல் கைதியான நடராசா குகநாதன் கொழும்பு மேல்நீதிமன்றத்தினால்  (16.09.21 )இன்று விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டினை சேர்ந்த நடேசு குகநாதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை  விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த நிலையில், 2009.05.19 ஆம் திகதி படையினரால் கைதுசெய்யப்பட்டார்.

பின்னர் மூன்று ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டு உயர்நீதிமன்ற தீர்பின் பிரகாரம் 2012.03.24 அன்று தொடக்கம் ஒரு ஆண்டு புனர்வாழ்வு பெற்று 2013.03.23 அன்று விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில் 2013.07.09 ஆம் திகதி அன்று தொலைபேசிமூலம் விசாரணைக்காக பயங்கரவாத விசாரணை பிரிவால் அழைத்து மீண்டும் கைதுசெய்யப்பட்டு பூசா சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் 2015ஆம் ஆண்டு நியூமகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டிருந்தார். 

இன்னிலையில் கடந்த 12 ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் சட்டமா  அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைவாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (16.09.21) விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29
news-image

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில்...

2026-02-13 16:47:13