யானைகள் விவகாரத்தில் வழங்கப்பட்ட உத்தரவு குறித்து கொழும்பு மேலதிக நீதிமன்றின் அறிவிப்பு

Published By: Digital Desk 4

16 Sep, 2021 | 10:10 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மோசடியாக ஆவணங்களை தயார் செய்து, யானைகளை உடன் வைத்திருந்தமை தொடர்பிலான விவகாரத்தில் சி.ஐ.டி.யின் பொறுப்பின் கீழ் பின்னவல மற்றும் வேறு யானை பராமரிப்பு நிலையங்களில்  தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 யானைகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்க நீதிமன்றம் விடுத்த உத்தரவை திருத்தி வேறு உத்தரவு பிறப்பிக்க முடியாது என கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று அறிவித்தது.  

மூன்று மாதங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ்  தற்காலிகமாக இந்த 14 யானைகளையும் இவ்வாறு கையளிக்க கொழும்பு மேலதிக நீதிவான் எஸ். பிரபாகரன் கடந்த  6 ஆம் திகதி  உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை மீளப் பெறுமாறு கோரி முன் வைக்கப்பட்டிருந்த  மனுக்கள் தொடர்பில் இன்று ஆராயப்பட்டது.

 அதன்  போதே நீதிவான் அதற்கு மறுத்தார். அத்துடன் குறித்த செப்டம்பர் 6 ஆம் திகதி வழங்கிய உத்தரவு தொடர்ந்து செல்லுபடியானதாகும் என அவர் அறிவித்தார்.

விலங்குகள் மட்டும் தாவரங்கள் தொடர்பிலான கட்டளை சட்டத்தின் 6 ஆம் அத்தியாயத்தின் 2 ஆம் பிரகாரமும், 2241/21 ஆம் இலக்க ஆகஸ்ட் 19 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமனி அறிவித்தல் பிரகாரமும், குறித்த யானைகளை பதிவு செய்வதற்காக அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்க நீதிமன்றம் அனுமதித்து உத்தரவிட்டிருந்தது.

 இந் நிலையில், அந்த உத்தரவானது நீதிமன்றை தவறாக வழிநடாத்தி பெறப்பட்ட உத்தரவு எனவும் அதனை மீளப் பெற வேண்டும் எனவும் கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் நகர்த்தல் பத்திரம் ஊடாக வன ஜீவிகள் ஆர்வலர்கள் என நம்பப்படும் 3 தரப்புக்களால் கோரப்பட்டன.

 ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, சிரேஷ்ட சட்டத்தரணிகளான ரவீந்ரநத் தாபரே, நிலூசி டி அல்விஸ் ஆகியோரால் அந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

 இதனையடுத்து கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல , அக்கோரிக்கையை,  கடந்த 6 ஆம் திகதி குறித்த உத்தரவை வழங்கிய நீதிவான் முன்னிலையில் முன் வைக்குமாறு கோரி இன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்தி வைத்திருந்தார்.

 இதன்போது சட்ட மா அதிபர் தரப்பில் முன் வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிவான் எஸ். பிரபாகரன், தான் கடந்த 6 ஆம் திகதியளித்த உத்தரவு தொடர்ந்து செல்லுபடியானது என அறிவித்தார். தனது உத்தரவு தொடர்பில் எவருக்கேனும் திருப்தியில்லாமல் இருப்பின் அவர்கள் மேல் நீதிமன்றங்களை நாட முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக யானை விவகாரத்தில், 47 யானைகள் தொடர்பில்  சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில்,  தில் 8 யானைகள் தொடர்பிலான விவகாரத்தில்  கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளன.

அத்துடன்  உரிமையாளர்களுக்கு கையளிக்க உத்தரவிடப்பட்ட 14 யானைகள் தொடர்பிலான சம்பவம் தொடர்பில்,இதுவ்ரை எவரும் கைது செய்யப்படவில்லை.

வன ஜீவிகள் பாதுகாப்பு திணைக்களத்தின்  யானைகளை பதிவு செய்யும் புத்தகத்தை மோசடியான முறையில் மாற்றி,  அனுமதிப் பத்திரம் இன்றி யானைகளை வைத்திருந்ததாக கூறி சி.ஐ.டி.யினர் இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

2014 ஜூலை மாதம் முதல் 2015 ஆகஸ்ட் மாதம்  வரையிலான காலப்ப்குதியில்  மஹரகம, அரவ்வல, பத்தரமுல்லை மற்றும் ஒருவல பிரதேசங்களில், முறைப்பாட்டாளர் தரப்பினர் அறியாதவர்களுடன் இணைந்து களவாடப்பட்ட யானைகள் என தெரிந்தும்  மோசடியான முறையில் யானை கடத்தல்களை முன்னெடுக்க சதித் திட்டம் தீட்டியமை, யானைகளை கடத்தியமை, சட்ட விரோதமாக அந்த யானைகளை வைத்திருந்த்மை தொடர்பில் 8 யானைகளை வைத்திருந்தவர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் 33 குற்றச்சாட்டின் கீழ் மேல் நீதிமன்றில்  குற்ரவியல் சட்டக் கோவை மற்றும் பொதுச் சொத்து துஷ்பிரயோக் சட்டத்தின் பிரகாரம் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சமரப்புலிகே நிராஜ் ரொஷான் எனும் அலி ரொஷான், வன ஜீவிகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராக ( சட்டம்) சேவையாற்றிய பெஸ்குவல் பொன்சேகாலாகே உபாலி பத்ம்சிறி, வன ஜீவிகள் திணைக்களத்தில் யானைப் பதிவுப் பிரிவுக்கு பொறுப்பாக செயற்பட்ட பதிவாளர்  எஸ். பிரியங்கா சஞ்ஜீவனீ,  சமரப்புலி ஹேவகே உச்சித நிஷான்

 தம்மிக, கடுபிட்டியகே சந்தன குமார, சஷிக சானுக் கம்லத், பலிஹபிட்டிய கமகே ஜயலத், ரணசிங்கலகே தமித்த சதுரங்க, ஆகிய வன ஜீவிகள் பாதுகாப்பு திணைக்கள ஊழியர்கள் உட்பட 8 பேருக்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வெளியிட்ட...

2025-03-20 02:41:29
news-image

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது...

2025-03-19 16:04:51
news-image

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’...

2025-03-19 17:21:51
news-image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக...

2025-03-19 22:52:48
news-image

8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு...

2025-03-19 21:51:24
news-image

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின்...

2025-03-19 17:16:13
news-image

இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார்...

2025-03-19 21:49:54
news-image

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குங்கள்...

2025-03-19 17:09:52
news-image

இவர் ஒரு குற்றவாளி – ஆனால்...

2025-03-19 22:05:38
news-image

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக...

2025-03-19 21:45:57
news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று...

2025-03-19 21:39:13
news-image

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் கட்டளைத்தளபதி அட்மிரல்...

2025-03-19 21:41:38