உட­லி­லுள்ள மிகப் பெரிய உறுப்­பா­னது ஈரல் ஆகும். மூளை, இரு­தயம், சிறு­நீ­ரகம், சுவா­சப்பை என்­ப­வற்றைப் போல மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மான பணி­களை ஈரல் செய்து வரு­கின்ற போதும் அதன் முக்­கி­யத்­துவம் பற்­றிய விழிப்­பு­ணர்வு குறை­வா­கவே உள்­ளது. கல்­லீரல் என்று பொது­வாக அழைக்­கப்­படும் ஈரல் (Liver) மனித உடலில் வயிற்றுப் பகு­தியில் மேற்­பு­ற­மாக அமைந்­துள்­ளது.இதன் பெரும்­ப­குதி வயிற்றின் வலப்­பு­ற­மா­கவும் சிறு­ப­குதி இடப்­பு­ற­மா­கவும் பரந்­துள்­ளது.

கொழுப்பு உண­வுக்­கூற்றை சமி­பா­ட­டைய வைப்­பது, குருதிக் குளுக்­கோசின் அளவை கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க உத­வு­வது, சில புர­தக்­கூ­று­களை உணவில் கிடைத்த புர­தக்­கூ­று­க­ளி­லி­லி­ருந்து உற்­பத்தி செய்தல், இரத்தம் உறை­வ­தற்கு தேவை­யான பதார்த்­தங்­களை உற்­பத்தி செய்தல், உடலில் தோன்றும் நச்சுப் பதார்த்­தங்­களை வெளி­யேற்ற உத­வுதல் எனப் பல்­வேறு பணி­களை செய்யும் ஈரல் எமது உடலில் முக்­கி­ய­மான உறுப்­பு­களில் (VITAL ORGANS) ஒன்­றாகும்.ஈரலின் செயற்­பா­டுகள் பாதிப்­புக்­குள்­ளானால் உடலில் பல்­வேறு நோய்கள் ஏற்­ப­டு­வ­துடன் உயி­ரா­பத்­தையும் ஏற்­ப­டுத்­தக்­கூடி­யது.

நவீன வாழ்க்கை முறை­யினால் ஈரல் பாதிப்­புக்­குள்­ளா­கின்­றது. துரித உண­வு­க­ளையும் சமச்­ சீ­ரற்ற உண­வு­க­ளையும் உட்­கொள்­வ­த­னாலும், மது­பா­வ­னை­யாலும், இயக்­க­மற்ற மது­பா­வ­னை­யாலும், இயக்­க­மற்ற வாழ்க்கை முறை­யி­னாலும், செங்­கண்­மாறி வைரஸ் தொற்­றுக்­க­ளாலும் ஈர­லுக்கு பாதிப்பு ஏற்­ப­டு­கின்­றது. நீண்­ட­கால மது­பா­வ­னையும், அதி­க­ளவில் மதுவை அருந்­து­வதும் ஈரலைப் பழு­த­டைய வைப்­பதில் முன்­னிலை வகிக்­கின்­றன.

இது­த­விர அசுத்­த­மான நீர், உணவு என்­ப­னவும் ஈரலைப் பாதிக்­கக்­கூ­டி­யன.உடலில் கொழுப்பு அதி­க­ரிக்கும் போதும் ஈரல் பழு­த­டையும் சந்­தர்ப்பம் அதி­க­ரிக்­கின்­றது.

ஈரலில் ஏற்­படும் தொற்று நோய்­க­ளான HEPATITIS – A , HEPATITIS – B, HEPATITIS – C முத­லா­னவை வைரஸ் தொற்றால் ஏற்­ப­டு­கின்­றன. நோயுற்­ற­போது முறை­யான பரா­ம­ரிப்பும் சிகிச்­சையும் இல்­லா­விட்டால் ஈர­லுக்கு பாதிப்பு ஏற்­ப­டலாம். இப்­பா­திப்­புக்­களின் தாக்கம் காலம் கடந்தும் தீவி­ர­ம­டை­யக்­ கூ­டி­ய­வை­யாகும்.

ஈரல் பாதிப்­புக்கு முக்­கிய கார­ண­மான மது­பா­வ­னை­யினால் ஈரல் கலங்கள் படிப்­ப­டி­யாக பாதிப்­புக்­குள்­ளாகி ELTBONIE LIVER DISEASE என்ற நீண்­ட­கால பாதிப்பு ஏற்­ப­டு­கின்­றது. இந்த நிலையில் மது­பா­வ­னையை நிறுத்தி உரிய சிகிச்சை பெறாது விட்டால் மிகவும் ஆபத்­தான சிரோசிஸ், நாளப்­பு­டைப்பு என்­பன ஏற்­ப­டலாம். ஈரலில் புற்­று­நோயும் ஏற்­ப­டு­வ­துண்டு.

ஈரல் நோயின் அறி­கு­றிகள்

ஆரம்­பத்தில் பசி­யின்மை, எடை­கு­றைவு, மஞ்சள் நிற­மாக சலம் விடுதல், மலம் வெளிர்­நி­ற­மாகப் போதல் முத­லான அறி­கு­றிகள் தோன்­றலாம். சிறிது தீவி­ர­ம­டையும் போது மஞ்சள் காமா­ளை­யாக வெளிப்­ப­டலாம்.

உள்­ளங்­கைகள், பாதத்தின் கீழ்ப்­புறம் என்­பன மஞ்சள் நிற­மாதல், கண்­களின் வெண்­விழி மஞ்சள் நிற­மாதல் என்­ப­வற்றை அவ­தா­னிக்­கலாம். ஈரலின் பாதிப்பு தீவி­ர­ம­டைந்து சிரோசிஸ் நிலை ஏற்­ப­டு­கின்ற போது பிரட்டு வாந்தி, இரத்­த­வாந்தி, கால்­வீக்கம், வயிறு வீக்கம் என்­பன ஏற்­ப­டலாம். சிலரில் நினைவு தவறும் நிலையும் ஏற்­ப­டலாம்.

சிகிச்சை முறைகள்

ஈரல் செய­லி­ழப்பின் ஆரம்ப நிலையில் மருந்­துகள் மூலம் சிகிச்­சை­ய­ளிக்க முடியும். ஈரலின் செய­லி­ழப்பு தீவி­ர­ம­டையும் போது சிகிச்சை கடி­ன­மா­கின்­றது. மர­ண­வி­கி­தமும் அதி­க­ரிக்­கின்­றது.

எனினும் அண்­மையில் அறி­மு­க­மா­கி­யுள்ள ஈரல் மாற்று சிகிச்சை மருத்­துவ உலகின் வளர்ச்­சி­யினால் கிட்­டி­யுள்­ளது. ஈரல் மாற்று சிகிச்­சையின் மூலம் பாதிப்­புற்ற ஒரு­வரின் ஈரலின் ஒரு பகு­தியை தான­மாகப் பெற்று நோயா­ளிக்குப் பொருத்தி அறுவை சிகிச்சை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

இதனால் நோயா­ளியின் ஈரல் முழு அள­வுக்கு வளர்ந்து விடு­கின்­றது. மனிதன் உயிர் வாழ ஆரோக்­கி­ய­மான ஈரலின் காற்­பங்கு போது­மா­னது என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

நோயை உறு­திப்­ப­டுத்த குருதிப் பரி­சோ­தனை, அல்றா சவுண்ட் ஸ்கேன் பரி­சோ­தனை என்­பன உத­வு­கின்­றன.குருதிப் பரி­சோ­த­னை­களில் அதி­க­ள­வி­லான அதி­க­ரிப்பு இருப்பின் உட­ன­டி­யாக சிகிச்­சையை மேற்­கொள்ள வேண்டும். ஈரல் மிகமோசமாக பாதிக்கப்பட்டவர்களில் சத்திரசிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும்.

எமது நாட்டிலும் இச்சத்திரசிக்ச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டுள்ளது. எனினும் இன்னமும் பரவலாக மேற்கொள்ளப்படும் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். ஈரல் புற்றுநோயையும் ஈரல்மாற்று சிகிச்சை மூலம் குணமாக்க முடியும். ஈரல் நோயை குணப்படுத்துவதை விட அதை வருமுன் காப்பது இலகுவானது. மதுபாவனையை முற்றாகக் கைவிட வேண்டும்.