(எம்.எப்.எம்.பஸீர்)

பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து கைதிகளை மிரட்டியதாக கூறப்படும் விடயம், மிக பாரதூரமானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Articles Tagged Under: சட்டத்தரணிகள் சங்கம் | Virakesari.lk

 அத்துடன் அவர் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள்  தொடர்பில் எந்த பதவியையும் வகிக்க தகுதியற்றவர் எனவும், வேறு அமைச்சுக்களையோ, எம்.பி. பதவியையோ தொடரக் கூட அவர்  நம்பிக்கையானவர்  அல்லர் எனவும் அந்த சங்கம் தெரிவிக்கின்றது. 

குறித்த விவகாரம் தொடர்பில் விஷேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அச்சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

'இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே சிறைச்சாலைகளுக்குள் அத்துமீறி நுழைந்து கைதிகளை மிரட்டியமை மிக தண்டனைக்குரியது என்பதுடன், சட்டவாட்சிக்கு அச்சுறுத்தலானதாகும்

இத்தகைய நடவடிக்கைகள் பாரபட்சமின்றி முழுமையாக விசாரிக்கப்பட வேண்டியவை என்பதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்ற தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என எமது சங்கம் வலியுறுத்துகிறது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுதந்திரமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணைகள் விரைவாக நடத்தப்பட வேண்டும்.

லொஹான் ரத்வத்தே இராஜினாமா தீர்மானத்தினால் தனது நடத்தைக்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் வகிப்பதற்கான உரிமையையும் அவர் இழந்துள்ளார்.' என  என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.