(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சியின் கிராம மட்டத்தில் செயற்படுகின்ற சகல செயற்பாட்டாளர்கள் தொடர்பான தகவல்களை சேரிக்கும் செயற்திட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பிரதேசசபை, நகரசபை, உள்ளுராட்சிசபைகள் மற்றும் தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் , தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் இளம் பிரதிநிதிகள் ஆகியோரால் இந்த தகவல்கள் சேகரிக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கிராம மட்டத்தில் கட்சி செயற்பாட்டாளர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படவுடன் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ளும் செற்திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று கட்சி தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் இணையவழி தொழில்நுட்பத்தில் நுழைந்த முதல் கட்சியாக அடித்தள மட்டத்திற்கு நிறுவனங்களின் வலையமைப்பை விரிவுபடுத்த கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல்களை வழங்கினார்.