எம்.மனோசித்ரா

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் அவிசாவளை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 208 கிராம் 890 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் பெற்றுக் கொண்டதாக சந்தேகிக்கப்படுகின்ற 350 000 ரூபா பணம் , 6 கையடக்க தொலைபேசிகள் என்பவற்றுடன் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24, 28, 31 மற்றும் 41 வயதுகளையுடைய அவிசாவளை, வெல்லவீதி, பொரளை மற்றும் கொழும்பு-12 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.