(ஆர்.யசி)

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் இருவரை அச்சுறுத்தி சித்திரவதைக்கு உற்படுத்திய செயற்பாடு தொடர்பில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் இராஜாங்க அமைச்சர் இரண்டு கைதிகளை மனவுளைச்சலுக்கு உள்ளாக்கியதற்காக நட்டஈடு வழங்க வேண்டும் என சிவில் சமூக பிரதிநிதிகள் வலியுறுத்துகின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களை விரைவில் விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிவில் அமைப்புகள் வலியுறுத்துகின்றனர்.