(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்யும் விவகாரத்தில் மலர்சாலைகளின் தலையீட்டினை நீக்கி, அரசாங்கத்தின் தலையீட்டுடன் மாத்திரம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் சடலங்களை தகனம் செய்யும் போது மக்கள் நெருக்கடிகளை எதிர்கொள்வதை தவிர்க்க முடியும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கிராமங்களிலுள்ள மக்கள் பணத்தை சேகரித்து சடலங்களை தகனம் செய்வதற்கு உதவி சந்தர்ப்பங்களும் உள்ளன.

தற்போது கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களிலும் கொவிட் சடலங்களை தகனம் செய்வதில் மலர்சாலைகள் பல தலையிடுகின்றன.

இவ்விடயத்தில் மலர்சாலைகளின் தலையீடுகள் முழுமையாக நிறுத்தப்பட்டு அரசாங்கத்தின் தலையீட்டுடன் மாத்திரம் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மக்கள் நெருக்கடிக்கு உள்ளாவதை தவிர்க்க முடியும் என்றார்.