சரும பராமரிப்பு நடைமுறைகளுக்கு உதவும் பாரம்பரிய அரிசி

16 Sep, 2021 | 03:08 PM
image

பண்டைய காலத்தில் இலங்கையில் 3,000 இற்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள் காணப்பட்டதோடு கிழக்கின் தானியக் களஞ்சியம் எனும் பெயரை இலங்கை பெற காரணமாகவும் இருந்தது. 

தோல் பராமரிப்புக்கு உதவும் அரிசி தொடர்பில் பலரும் அறிந்திருக்காமல் இருப்பது ஆச்சரியமான விடயமல்ல. அது தொடர்பில் குறைவாக அறியப்பட்டிருந்தாலும், அரிசியானது, பண்டைய அழகு பராமரிப்பு முறைகளின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. 

அது பெண்களுக்கு பளபளப்பான, இளமையான சருமத்தை தக்கவைக்க உதவியது. கலங்களின் சிதைவை தடுக்கும் மூலங்களான அன்ரிஒக்ஸிடன்கள் (antioxidants), விற்றமின்கள், கனியுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாரம்பரிய அரிசியானது, பண்டைய இலங்கையர்களின் முக்கிய உணவாக இருந்து பல்வேறு நன்மைகளையும் வழங்கி வந்த அதே நேரத்தில் தோலை பராமரித்து இளமையின் அழகைப் பேண உதவி வந்தது.

பாரம்பரிய அரிசியைப் பொறுத்தவரை, ஒவ்வொரு அரிசி வகைகளும் சுவாரஸ்யமான அம்சங்களுடன் தொடர்புடையவை. “சுவந்தெல்” எனும் சிங்களச் சொல் ஒரு குறிப்பிட்ட அரிசி வகையின் அழகிய நறுமணத்தை குறிப்பிடும் சொல்லிலிருந்து வந்துள்ளது.

சுவந்தல், மடதவாலு, மா வீ, ஹெங்கிமுத்தன் போன்ற நெல் வகைகள் இயற்கை முறையிலான மழை வீழ்ச்சியின் அடிப்படையில், பாரம்பரியமான புனிதமாக பேணப்படும் விவசாய செயன்முறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறான பண்டைய விவசாய செய்கைக்கு அதிக காலம் எடுக்கும். ஆயினும், கடந்த சில தசாப்தங்களில் அதிக விளைச்சல் தரும் அரிசிகள் மற்றும் வணிக ரீதியான அரிசி வகைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

தற்காலத்தில் மக்கள் உட்கொள்கின்றதும் மக்களின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் பயனுள்ளது என கருதப்படுகின்றதுமான நவீன அரிசி வகைகளை விட, பாரம்பரிய அரிசி வகைகளானவை சிறந்தவையாகக் காணப்படுகின்றன.

 அவை அன்ரிஒக்ஸிடன்கள், விற்றமின்கள், கனியுப்புகளுடன் மிகவும் சத்தானவையாகும். பாரம்பரிய அரிசி கொண்டுள்ள போசாக்கின் நன்மைகளை ஆழமாகப் பார்ப்போமானால், மடதவாலு, கலுஹீனட்டி போன்ற போன்ற சிவப்பு அரிசி வகைகள், வெள்ளை அரிசி வகைகளை விட அதிக அன்ரிஒக்ஸிடன் பண்புகளைக் கொண்டுள்ளன. 

பாரம்பரிய அரிசி வகைகளில் மிகவும் சக்திவாய்ந்த அன்ரிஒக்ஸிடன்களாக காணப்படும் பெருலிக் அமிலம் (Ferulic Acid), பளபளப்பான சருமத்தையும், புற ஊதா கதிர்களிடமிருந்து (UV Rays) இயற்கையான பாதுகாப்பையும் வழங்குவதுடன், அரிப்புகள், எரிவுகள், மாசுபடுத்திகளிலிருந்து சருமத்தைப் பாதுகாத்து, சருமத்தின் ஈரப்பதனை மேம்படுத்தி, சருமத்தின் நிறத்தை சீராக வைக்கிறது. அத்துடன் தோலில் சுருக்கம், வரட்சியையும் நீக்குகிறது. 

இந்த அரிசி வகைகளில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அவசியமான விற்றமின்கள், கனியுப்புகள், காபோவைதரேற்றுகள், இலிப்பிட்டுகள் நிறைந்த ஊட்டச்சத்துக்களின் கணிசமான பகுதியும் அடங்கியுள்ளது.

பாரம்பரிய அரிசியானது, அரிசி-இலிப்பிட்டுகளின் போசணையை கொண்டுள்ளதன் மூலம், தோல் பிரச்சினைகளை நீக்கி அதனை பலப்படுத்துகிறது. 

அத்துடன் சருமத்தின் அமில மட்டத்தை பராமரிப்பதுடன் தோலுக்கு அத்தியாவசியமான ஈரப்பதனை அதில் தக்க வைக்க உதவுகிறது. 

பாரம்பரிய அரிசியில் உள்ள தோல் வளர்ச்சி காரணியானது (EGF) கல வளர்ச்சி மற்றும் அவற்றின் புதிதான உருவாக்கத்தை தூண்டுவதுடன், தோல் வயதாததிலிருந்து உச்ச அளவில் பாதுகாத்து, தோலை நேர்த்தியாக பேணி, அதில் எழும் சுருக்கங்களை குறைக்கிறது. 

அரிசியில் உள்ள EGF ஆனது ஒரு புரதமாகும், இது மனித EGF போன்றதாகும். இது தோலைப் பேணும் கலங்களைத் தூண்ட உதவுவதுடன் கல வளர்ச்சியை வேகமாக்க உதவுகிறது. 

அத்துடன் பாரம்பரிய அரிசியானது, இயற்கையான  புற ஊதாக் கதிர்களிலிருந்து (UV Rays) பாதுகாக்கும் பாதுகாப்பானாகவும் செயற்படுகிறது.

இவ்வாறான சரும பராமரிப்பு பண்புகள் அனைத்தும் இணைந்து தோலின் நிறத்தை பொலிவாக்கி, பளபளப்பானதும், இளமையானதும் ஈரப்பதனான சருமத்தை பெண்களுக்கு வழங்குகிறது.

ஆரோக்கியம் தொடர்பில் அதீத அக்கறையுள்ள இன்றைய மக்கள், இயற்கையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை நோக்கிச் செல்லும் நிலையில், பழங்கால அழகு பராமரிப்பு முறைகள் மற்றும் பாரம்பரிய அரிசியின் அற்புதங்களால் ஈர்க்கப்பட்டு, தோல் பராமரிப்புக்கான அரிசியின் நன்மை பற்றியும் பேச ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பான் ஏஷியா வங்கியின் புதிய டிஜிட்டல்...

2024-10-10 16:32:26
news-image

2024 ‘ஹஜ் - உம்றா’ பயணத்தில்...

2024-09-12 19:54:27
news-image

இலங்கையில் குடியிராத வெளிநாட்டு தனிநபர்களுக்கு உள்வாரி...

2024-09-12 13:02:54
news-image

தனியார் துறையில் புத்தாக்க நிதியளித்தல் தீர்வுகள்...

2024-09-12 13:21:44
news-image

மாற்று முதலீட்டு வாய்ப்புகளை முன்னிலைப்படுத்த மட்டக்களப்பில்...

2024-09-12 13:15:45
news-image

குளியாப்பிட்டியாவில் வாகன பாகங்களை ஒன்றிணைத்து வாகனங்களை...

2024-09-11 17:16:20
news-image

சவாலான கால நிலைகளிலிருந்து உங்கள் வீட்டை...

2024-09-10 15:55:46
news-image

3 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் பதிவுகளுடன்...

2024-09-10 12:23:12
news-image

சுவாச ஆரோக்கியத்திற்கான NIHR குளோபல் ஹெல்த்...

2024-09-09 20:40:22
news-image

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க ரணில் வில்லத்தரகே...

2024-09-09 19:39:28
news-image

50 ஆண்டுகளை நிறைவு செய்யும் எய்ட்கன்...

2024-09-09 10:20:01
news-image

தாய்லாந்தில் இடம்பெற்ற 13ஆவது HAPEX மற்றும்...

2024-09-09 09:30:01