அமெரிக்க சிறப்பு படை வீரர்கள் மீது கொடிய தாக்குதலை நடத்திய இஸ்லாமிய அரசின் (ISIS) தலைவர்களுள் ஒருவரான அட்னான் அபு வாலித் அல்-சஹ்ராவி மேற்கு ஆபிரிக்காவில் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வியாழனன்று டுவிட்டர் பதிவில் உறுதிபடுத்தியுள்ளார்.

சகோலில் இடம்பெற்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரான எங்கள் மோதல், மற்றொரு பாரிய வெற்றியாகும் என்று மக்ரோன் அந்த பதிவில் கூறியுள்ளார்.

சஹ்ராவி மேற்கு ஆபிரிக்காவின் சகோல் பகுதியில் இஸ்லாமிய அரசின் வரலாற்றுத் தலைவராக இருந்தார் மற்றும் அவரது குழு 2017 இல் கொடிய தாக்குதலில் அமெரிக்க வீரர்களை குறிவைத்ததாக மக்ரோனின் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

2020 ஆகஸ்ட்டில், சஹ்ராவி தனிப்பட்ட முறையில் ஆறு பிரெஞ்சு தொண்டு நிறுவன ஊழியர்களையும் அவர்களின் நைஜீரிய சாரதியையும் கொல்ல உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.