வரிப்பணம் செலுத்தும் போது சேவைக்கட்டணம் செலுத்த தேவையில்லை - கொழும்பு மாநகர ஆணையாளர் அறிவிப்பு

Published By: Digital Desk 3

16 Sep, 2021 | 11:40 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இணையவழி ஊடாக வரி கட்டணம் செலுத்தும்போது கொழும்பு மாநகரசபையினால் அறவிடப்பட்டுவந்த சேவை கட்டணம் நீக்கப்பட்டுள்ளது. அதனால் வரி கட்டணம் செலுத்தும்போது சேவை கட்டணம் செலுத்த தேவையில்லை என கொழும்பு மாநகர ஆணையாளர் சட்டத்தரணி ராேஷினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் வாழும் மக்கள் தங்கள் வரி கட்டணத்தை மாநகரசபையின் www.colombo.mc.gov.lk என்ற இணையத்தளத்துக்கு சென்று செலுத்துவதற்கு மாநகரசபை  இடமளித்திருந்தது. அதன் பிரகாரம் அதிகமான மக்கள் இணைவழி ஊடாக தங்கள் வரி கட்டணங்களை செலுத்தி வருகின்றனர்.

இணையவழி ஊடாக வரி கட்டணம் செலுத்தும்போது இதுவரை அதற்காக சேவை கட்டணம் ஒன்றை கொழும்பு மாநகரசபையால் அறவிடப்பட்டு வந்தது. என்றாலும் தற்போது சேவைக்கட்டணத்தை அறவிடாமல் இருப்பதற்கு மாநகரசபை தீர்மானித்திருக்கின்றது. அத்துடன் இதற்கு முன்னர் அறவிடப்பட்ட சேவை கட்டணத்தை கொழும்பு மாநகரசபையினால் செலுத்தப்படும்.

இதேவேளை, கொழும்பு மாநகரசபையினால் வழங்கப்படும்  பொது மக்கள் நிவாரண நிதி, கிரேண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை மற்றும் மாளிகாவத்தை தபால் நிலையங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாமல்போனவர்கள், எதிவரும் 21ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் மாநகர ஆணையாளர் கோரி இருக்கின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த...

2024-02-24 07:36:47
news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:21:28
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36