அண்ணாத்த "ஃபர்ஸ்ட் லுக் " ‍வெளியீட்டிற்காக ஆடு வெட்டி கொண்டாட்டம் ; அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் கண்டனம்

By Vishnu

16 Sep, 2021 | 10:27 AM
image

"அண்ணாத்த" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டிற்காக ஆடு வெட்டி கொண்டாடிய ரசிகர்களுக்கு எதிராக அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Rajinikanth's fans slaughtered a goat to celebrate Annatthe's first-look poster launch.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் அண்ணாத்த. இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். 

இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்தரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

தீபாவளிக்கு (நவம்பர் 4) அண்ணாத்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப் படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக்' போஸ்டரை திரைப்படத் தயாரிப்பாளர்கள் கடந்த செப்டம்பர் 10 விநாயக சதுர்த்தி அன்று வெளியிட்டனர்.

'ஃபர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியீட்டிற்காக தமிழகத்திலுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிலர் ஆடு வெட்டி கொண்டாடும் காணொளி சமூகல வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

‍இந் நிலையில் இந்த கொடூரமான சம்பவத்தை கண்டிக்கும் வகையில் அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் நேற்றைய தினம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

இந்த செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது மட்டுமன்றி, மிகவும் வருந்தத்தக்கது. அருவருப்பான இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right