சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் மேலும் 965 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 89 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுததல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 73,078 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் உள்நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் அமைக்கப்பட்டுள்ள சாலை தடுப்பு நிலையங்களில் நேற்றைய தினம் 1320 வாகனங்களில் பணித்த 1934 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது உரிய அனுமதியின்றி எல்லைகளை கடக்க முயன்று 197 வாகனங்களில் பயணித்த 308 நபர்கள் திருப்பு அனுப்பப்பட்டனர்.