ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சுப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டியின் 2ஆவது அரை இறுதி போட்டியின் 2ஆவது ஆட்டம் கொல்கத்தாவில் நடந்தது.

இதில் கொல்கத்தா 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அந்த அணிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

முதல் ஆட்டத்தில் சென்னை அணி 3–0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தி இருந்தது. இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் கோல் விகிதம் கணக்கிடப்பட்டது.

இதில் சென்னையின் எப்.சி அணி 4–2 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது. இதனால் சென்னை அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நடப்பு சம்பியனான கொல்கத்தா அரை இறுதியோடு வெளியேற்றப்பட்டது.

சென்னையின் எப்.சி இறுதிப்போட்டியில் கோவா அணியை சந்திக்கிறது. இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கோவாவில் நடக்கிறது.

இரு அணிகளும் இந்தத் தொடரில் மோதிய ‘லீக்’ ஆட்டங்களில் தலா ஒரு வெற்றி பெற்றன. கோவாவில் நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. 4–0 என்ற கோல் கணக்கிலும்இ சென்னையில் நடந்த ஆட்டத்தில் கோவா 2–0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றன.