இளம் சந்ததியினர் நாட்டின் அபிவிருத்தியின் உயிர்நாடியாவர். நாட்டின் எதிர்காலத்தின்   உரிமையாளர்களும் அவர்களாவர். நாளை உருவாகும் புதிய உலகினை கட்டி எழுப்புபவர்களும் அவர்களாவர்.

எனவே நாட்டின் இளம் தலைமுறையினர் மீது எங்கள் அனைவரதும் சீரான கவனம் செலுத்தப்பட வேண்டும். நாடொன்றின் பொறுப்புக்களை ஏற்கவிருக்கின்ற இளம் தலைமுறையினர் வழிதவறிச் சென்றால் ஏற்படும் விபத்தை வேராக கூறத்தேவையில்லை.

இளைஞர் என்றால் அப்பாவி துறவியைப் போன்ற பிரஜை என்று வரைவிலக்கணப்படுத்த முடியாது. பலம் வாய்ந்த, துணிச்சல் மிக்க இளைஞர்கள் நாட்டின் வளங்களாவர். புதியதை தேடுகின்ற, புத்தாக்கம் செய்கின்ற மதிநுட்பத்துடன் செயற்படுகின்ற இளம் தலைமுறையினர் நாட்டிற்கு இருந்தால் அது அந்த நாட்டின் அதிர்ஷ்டம் ஆகும்.

ஆனால் தற்சமயம் காணப்படும் கொரோனா வைரஸ் (Covid-19) மனித உயிர்களுக்கு தாக்கம் செலுத்தி வருகின்றது.  இது இலங்கை சமுதாயத்தினரிடம் போன்றே உலகினுள் தீர்க்கமான முறையில் பரவி வருவதனால் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி ஏற்பட காரணமாக அமைந்தது.

இதனால் அதிகம் தாக்கம் ஏற்பட்டது இளைஞர் தலைமுறையினர் மீது ஆகும் எனக் கூறுவது சாலச் சிறந்தது. கொரோனா வைரஸ் உலகம் பூராகப் பரவி வருவதனால் உலகம் பௌதீக ரீதியில் விலகிச் சென்று தொழில்நுட்பம் முன்னைய   நாட்களை விட  மனிதனுக்கு அண்மித்து விட்டது.

வேறு வேறாக வாழ்ந்தாலும் ஒன்றிணைந்து பொது தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு கொரோனாவினால்  சாத்தியமானது.

இளைஞர்களில் காணப்படக்கூடிய இந்த மந்தத் தன்மையான சிந்தனையை மாற்றுவதற்கும் அவர்களுள் காணப்படும் இயல்பான திறன்களை விருத்தி செய்து சமூக மயப்படுத்துவதற்கும் தேசிய இளைஞர் படையணி மூலம் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பதட்டத்தன்மை , எதிர்பார்ப்பின்மை,  வேலைவாய்ப்பின்மை காரணமாக ஏற்படும் மன உளைச்சல், ஒழுக்க நெறியின்மை, சொகுசான வாழ்க்கையை அனுபவிக்க காணப்படும் விருப்பம் போன்றன இளைஞர்களின் குணாதிசயங்கள் ஆகும்.ஆனால் இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் கடந்து சென்று ஒழுக்கத்துடன் சமூக மயப்படுத்த ஆயத்தமாகின்ற இளைஞர்கள் கட்டாயம் காணப்பட வேண்டியதாகும். 

தேசிய இளைஞர் படையணியில் காணப்படுகின்ற விசேடமான இலக்கு ஒழுக்கத்தை கட்டியெழுப்புவது ஆகும். உயர்ந்த பிரஜைகளின் குணாதிசயங்களை மேம்படுத்தக்கூடிய தேசிய இளைஞர் படையணி தேசிய கீதத்திற்கு, தேசியக்கொடியிற்கு மாத்திரம் அல்லாது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளிலும் கவனம் செலுத்தி மென் திறன்களை மேம்படுத்துகின்றன செயற்பாடுகளை தமது பயிற்சி நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கி இருப்பது கட்டுப்பாட்டுடன் எதிர்காலத்தில் நாட்டை பொறுப்பேற்பவர்களின்   அடையாளத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆகும்.

ஒழுக்கம், தலைமைத்துவம், ஆளுமை விருத்தி என்ற மூன்று தலைப்புகளை அடிப்படையாகக்கொண்டு செயற்படுகின்ற தேசிய இளைஞர் படையணி ஏனைய அனைத்து இளைஞர் வலுவூட்டல்களையும் தாண்டி, சவால்களுக்கே சவால் விடுக்கக்கூடிய ஆளுமையுடைய பலம்வாய்ந்த இளைஞர் படை ஒன்றை கட்டியெழுப்புவதற்காக தெளிவானதும், முறையானதும் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அனைத்து தடைகள் முன்னிலையிலும் தளராமல், விழாமல், விழுந்த இடத்திலிருந்து எழக்கூடிய ஆத்ம சக்தியை தம்முள் கட்டியெழுப்புவதற்கு தேசிய இளைஞர் படையணியினரினருடன் இணையும் பயிலுனர்களுக்கு  பயிற்சிக் காலத்தினுள் சிறந்த முறையில் பயிற்சி வழங்கப்படும்.

சமூக மானிட விஞ்ஞானிகள் இளைஞர்கள் தம்முள் எதிர்காலம் பற்றி உதாசீன தன்மையை ஏற்படுத்தி கொள்வதாக கூறுகின்றனர். எந்த ஒரு நபரும் தமது வாழ்க்கையில் தமது அடையாளத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டின் மூலம் குழு மற்றும் உப கலாச்சாரங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். அதற்கமைய தம்முள் ஏற்படுத்திக்கொண்ட உதாசீனத்தன்மையை அப்புறப்படுத்தி சிறந்த எதிர்காலத்தை நோக்கி இளைஞர்களை தூக்கி விடக்கூடிய பணிப்பொறுப்பை தேசிய இளைஞர் படையணி சிறப்பாக மேற்கொள்கின்றது.

கொரோனா வருவதற்கு முன்னர் தொழில்நுட்பத்தை தவறவிட்ட அனேகமானவர்கள் பின்னர் தொழில் நுட்பத்திற்கு நெருக்கமானது அதனை தழுவ வேண்டிய ஏற்பட்டதால் ஆகும். இந்தக் கொரோனா தொற்றுநோயுடன் கல்வியும் ஒருவகையில் ஒரு படி  முன்னோக்கிச் சென்றுள்ளது. அது நேரலை கல்வி முறைமை (Online Education)  இற்கு சிறுவர் மற்றும்  இளம் தலைமுறையினரை இட்டுச் சென்றதால் ஆகும். சில மாணவர்கள் இணைய கல்விக்குள் நுழைந்துள்ளதுடன் அந்த வரப்பிரசாதத்தை அனைவருக்கும் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. மாணவர்கள், தனிப்பட்ட நேரலை கல்வியில் (Online) ஈடுபடுவதில் அவர்களுடைய பொருளாதார மற்றும் சமூக நிலை தாக்கம் செலுத்துகின்றன.

விடயங்கள் அவ்வாறு இருப்பதனால் தேசிய இளைஞர் படையணி தமது பயிற்சி நடவடிக்கைகளை இந்தத் தொற்று நோய் காணப்படுகின்ற காலத்திலும் தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வது விசேட தன்மை ஆகும். அதற்காக அனைத்து இளைஞர் படையணி பயிலுனர்களுக்கும் இணைய வசதியுடைய சிம்கார்ட் இலவசமாக வழங்கி அடிப்படை ஆளுமை விருத்தி, தலைமைத்துவம் மற்றும் மென் திறன் விருத்தி பயிற்சி பாடநெறியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து தரப்பினரும் சரிந்து போனாலும் தேசிய இளைஞர் படையணி தமது பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு தேசிய மட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் பலவற்றை நாடளாவிய ரீதியில் நடாத்தி வருகின்றது.  அனைத்து நிகழ்ச்சித் திட்டங்களும் பயிலுனர்களான இளைஞர் யுவதிகளுள் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட முறையற்ற அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் அவர்கள் தம்முள் சுயேச்சையாக சமூக சேவையாளர் ஒருவரை உருவாக்கிக்கொள்ளும் இலக்கை அடைந்து கொள்ளும் வரை நீடித்து காணப்பட்டது. 

இரண்டு வருடகாலமாக கொரோனா வைரஸின் மூலம் அடிபட்டு காணப்படும் ஒட்டு மொத்த உலக மக்கள் முன்னிலையில் இலங்கை ஒருவகையில் வெற்றிகரமான எல்லைக்கு வந்துள்ளதாக ஏற்றுக்கொள்ள முடியும். அனைத்து மக்களும் வீட்டுக்குள் அடைபட்டு காணப்படுமிடத்து தேசிய இளைஞர் படையணி தமது பிரயோக கருத்திட்டங்கள் பலவற்றை இவ்வாறு செயற்படுத்தி வருகின்றது.

கொவிட் 19 தொற்றுநோய் முன்னிலையில் இரத்த வங்கியில் இரத்த கையிருப்பில் காணப்பட்ட இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்களின் எண்ணக்கருவிற்கமைய நாடளாவிய ரீதியில் காணப்படும் தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையங்களில் இரத்ததான நிகழ்ச்சி திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஆற்றல் உடைய இளம் தலைமுறையினர் மற்றும் அதற்காக ஆற்றலுடைய அனைத்து நபர்களுக்கும் இதில் பங்குபற்றுமாறு அனைத்து இலங்கை வாழ் இரத்த தானம் செய்யும் மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கமைய பயணத்தடை காணப்பட்ட காலப்பகுதியிலும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

அனைத்து குடும்பங்களும் போன்றே, ஜாதி, குலம், மத பேதமில்லாமல் அனைத்து சமூகத்திலும் நாய்கள், பூனைகள், முயல்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வீடுகளில் வளர்க்கப்படுவதுடன் நேரடியாக ஆராய்ந்து பார்க்காமல் கிராமங்கள்-நகரங்களை அண்டி வீதிகளிலும் வாழ்ந்து வருகின்றன.

கொவின் 19 தொற்றுநோய் முன்னிலையில் எங்களை அண்மித்து வாழும் விலங்குகள் பாரிய உணவு பற்றாக்குறையை எதிர் நோக்கியுள்ளதுடன், பயணக்கட்டுப்பாடு அமுலிலுள்ள காரணத்தினால் மற்றைய நாட்களில் அந்த விலங்குகளுக்கு உணவு கிடைத்த சாதாரண முறை கூட மாற்றமடைந்துவிட்டது. அதனால் இளைஞர்களது மென் திறன்களை கட்டியெழுப்புவதில் விலங்கு நேயம், கருணை போன்றே, எங்கள் சுற்றுச்சூழலில் உள்ள அனைத்து உயிர்களதும் இருப்பை பாதுகாக்க வேண்டிய சமூகப் பொறுப்பு பற்றி நம்பிக்கை வைத்துள்ள தேசிய இளைஞர் படையணி பல்வேறு பகுதிகளில் உணவு பானம் நாளாந்தம் கிடைக்காமல் அவதியுறும் தெருவோர நாய்கள் உள்ளிட்ட  சுயமாக உணவுகளை தேடிக் கொள்ள முடியாமல் காணப்படும் விலங்குகளின் பசியைப் போக்குவதற்காக விசேட மனிதாபிமான நிகழ்ச்சித்திட்டம் "விலங்கு நேய உதவி திட்டம்" ஆக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, தேசிய இளைஞர் படையணியின் அனைத்து நிலையங் களும், பயிலுனர்களான இளைஞர் யுவதிகள் மற்றும் பழைய மாணவர்கள் போன்றோரை இலக்காகக் கொண்ட இளம் விவசாய முயற்சியாண்மையை கட்டியெழுப்பும் விசேட வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை போட்டி "Y -Green" என்ற பெயரால் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் நாட்டில் காணப்படும் கொவிட் தொற்றுநோய் நிலைமயிலும் , பயணக் கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் ஒழுங்குமுறைகள் மீது மேலும் சமூக பொதுமைப்படுத்தல்  ஏற்படவுள்ள வாய்ப்புகள் குறைதல் போன்றே எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வாழ்க்கைச் செலவு சுட்டி அதிகரித்தல் போன்ற  விடயங்கள் காரணமாக தேசிய இளைஞர் படையணியினருடன் இணையும் இளைஞர் யுவதிகளுக்கு அன்றாட வாழ்க்கையில் பயன்பெறக்கூடிய முறையில் நேரடி விவசாய நிகழ்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தவும் இந்த "Y -Green" பசுமை வீட்டுத்தோட்ட பயிற்சி திட்டத்தின் நோக்கமாகும்.

கொரோனா  வைரசால் அனர்த்தத்திற்கும் அநாதரவான நிலைக்கும் உள்ளானவர்களுக்கு  நிவாரணம் வழங்கும் நோக்கில் "சுசுமட்ட சவியக்" அனர்த்த நிவாரண இளைஞர் நடவடிக்கை தேசிய இளைஞர் படையணி சமூக நலன்புரி நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள உதவி தேவையான எங்களுடைய மக்களுக்காக முடிந்த அளவில் நிவாரணம் வழங்கும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த அனைத்து நிகழ்ச்சித் திட்டங்களையும் ஆரம்பித்து தனிமையாக வீட்டில் அடைபட்டு வாழ்க்கையை கழிப்பதை விட தம்முள் கட்டியெழுப்பும் தன்னார்வ தொண்டு பணியாளர் மூலமாக சமூகத்திற்கு முடிந்த அளவில் சேவை செய்ய தேசிய இளைஞர் படையணி பணியாளர்கள், பயிலுனர்களான இளைஞர் யுவதிகள் , பழைய மாணவர்கள் மிக உற்சாகத்துடன் இணைந்து கொண்டனர். தடைகள் ஏற்பட்டாலும், அத் தடைகள் முன்னிலையில் தளராமல் முன்னேறுவதற்கு தேசிய இளைஞர் படையணி தனது மென் திறன் விருத்தி பயிற்சி மூலம் பயிலுனர் களுக்கு எப்போதும் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த அனைத்து நற்செயல்களையும் தமக்கும், சமூகத்திற்கும் நாட்டிற்கு பயனுள்ள எதிர்காலத்தை உருவாக்கும் தாய் வீடாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

நாட்டின் ஒரே ஒரு மென் திறன் விருத்தி பயிற்சி நிறுவனமான தேசிய இளைஞர் படையணி இதுவரை வந்த பயணப்பாதையில் எதிர்நோக்கிய சவால்களை வெற்றி கொண்டுள்ளது. அது தனியாகவல்ல. தூர நோக்குடைய தலைமைத்துவத்தை கொண்டு சரியான முறையில் பயணத்தை ஒன்றாக பயணிக்கும் அனைத்து பிரிவினரின் ஒற்றுமையால் ஆகும். நாம் உங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். நாங்கள் செல்லும் பயணப்பாதையை உங்களுக்கும் தெளிவாக விளக்குவோம். நாளைய உலகை வெல்லக்கூடிய புத்தி சாதுரியமான, ஆளுமையுடைய நல்ல குடிமகனாக மாற தேசிய இளைஞர் படையணியினருடன் இணையுங்கள். நோக்கமற்ற இளைஞர்களான உங்களுக்காக நாங்கள் உங்களில் காணப்படும் திறன்களை வெளிப்படுத்தி உங்கள் நோக்கத்தை அடைய பாதையை காட்டுவோம்.