கைதிகள் முறையற்ற விதத்தில் நடத்தப்படுகின்றமைக்கு ஐ.நா. கண்டனம்

Published By: Digital Desk 3

15 Sep, 2021 | 04:15 PM
image

(நா.தனுஜா)

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. அவ்வாறிருக்கையில் எவ்வகையிலேனும் சிறைக்கைதிகள் முறையற்ற விதத்தில் நடாத்தப்படுவதனை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் முகாமைத்துவம், சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச்சென்று, அங்கு தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து அவர்களில் இருவரை மண்டியிடச் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதனைக் கண்டனம் செய்யும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

'சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'மண்டேலா விதிகளின்' பிரகாரம் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது. இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் போதைப்பொருளுடன் தொடர்புடைய புனர்வாழ்வளித்தல் செயற்பாடுகளின்போது, தடுக்காவலின்கீழ் இருப்பவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் சிறைக்கைதிகள் முறையற்ற விதத்தில் நடாத்தப்படுவதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன்' என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58