(எஸ்.என்.நிபோஜன்)

கிளிநொச்சி பளை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஜவா் பலியாகியுள்ளதுடன் ஆறுபோ் காயமடைந்துள்ளனா்.

பளை புதுக்காட்டுச் சந்திக்கும் தர்மக்கேணி பிரதேசத்ததிற்கும் இடையில் ஏ-9 வீதியில் இத்துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வுவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்தும், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த வான் ஒன்றும் நேருக்கு நோ் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற மரண வீடொன்றில் பங்கேற்றுவிட்டு யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே பலியானதுடன், காயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த ஆறு பேரில் ஒருவா் மேலதிக சிகிசைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஏனையவா்கள் பளை மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேரூந்தின் சாரதியை கைதுசெய்துள்ள பளை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

குறித்த விபத்தில் வானில் பயணித்த நால்வரே உயிரிழந்துள்ளனர். நெல்லியடி பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த எஸ்.பசுபதி (வயது – 78),  ப.பொன்னம்மா (வயது – 75), ப.நந்தமூர்த்தி (வயது – 43) ஆகியோரும் அவர்களின் உறவுப்பெண்ணான 55 வயது மதிக்கத்தக்க ஒருவருமே விபத்தில் உயிரிழந்தவர்களாவர். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் பெயா் விபரங்கள் கிடைக்கவில்லை.