இலங்கையில் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கம்சாயினி குணரட்ணம் நோர்வேயில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

கம்சாயினி இலங்கையிலிருந்து நோர்வே நாட்டுக்குக் தனது மூன்று வயதில் குடிபெயர்ந்துள்ளார். 19 வயதில் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்த கம்சி 27 வயதில் ஒஸ்லோவின் துணை மேயராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 2019 ஆண்டும் அதே பதவிக்கு மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.

ஐரோப்பாவில் முதன் முதலாக ஈழத்தமிழ் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 33 வயதான கம்சாயினி, நோர்வேயில் திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தலில் தொழிற்கட்சி சார்பாக இரண்டாம் நிலையில் தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை வந்திருந்த போது கம்சாயினி குணரட்ணம் வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணல்