இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால்  நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை (15.09.2021) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியிடமிருந்து அஜித் நிவாட் கப்ரால்  னது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். 

பிரசித்திபெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால், இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகவும் சுமார் 9 வருட  காலப்பகுதி வரையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேற்படி நியமனக் கடிதம் பெறும் நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவும் கலந்துகொண்டார்.