அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க, தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக வொஷிங்டனுக்கு நியமிக்கப்பட்ட ஒன்பது மாதங்களுக்கு பின்னர் அவர் இந்த ஓய்வை அறிவித்துள்ளார்.

ரவிநாத் ஆரியசிங்க கடந்த 2020 டிசம்பர் மாதம் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக பொறுப்பேற்றார்.

செப்டம்பர் 10 அன்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகத்தில் (SCA) வெளியுறவுத்துறையின் மூத்த ஆலோசகரான எர்வின் மாசிங்காவுடனான பிரியாவிடை கூட்டத்தின்போது, தேசிய பாதுகாப்பு கவுன்சில், வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்காவின் பிற துறைகள் மற்றும் முகவர்கள் ஆகியவற்றின் ஆதரவை துதுவர் ஆரியசிங்க பாராட்டினார்.