(ரொபட் அன்டனி) 

சர்வதேச தகவலறியும் தினத்தை முன்னிட்டு  எதிர்வரும்  28 மற்றும் 29 ஆம் திகதிகளில்  கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வதேச மாநாடொன்று நடைபெறவுள்ளது.  

ஊடகத்துறை அமைச்சு மற்றும்   அரசாங்கத் தகவல் திணைக்களம்     ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு    தகவல் அறிதல், மற்றும்  ஊடக மறுசீரமைப்பு  என்ற தொனிப்பொருளில்   நடைபெறவுள்ளது. 

கொழும்பு  ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவிருக்கும் இந்த சர்வதேச மாநாட்டில்  பிராந்திய மற்றும் சர்வதேச துறைசார் நிபுணர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.  

குறிப்பாக தகவல் அறியும் செயற்பாட்டில் பிராந்திய  அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளுதல், தொழில்நுட்ப  பரிமாற்றுதல் ஆகியன இந்த   மாநாட்டின் நோக்கமாகும்.  குறிப்பாக   இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளின்  அனுபவங்கள் இதன்போது பகிரப்படும்.