காத்தான்குடி பலசரக்கு கடையில் பதுக்கி வைத்திருந்த பால்மா பக்கெட்டுக்கள் மீட்பு

Published By: Digital Desk 4

14 Sep, 2021 | 10:02 PM
image

காத்தான்குடியில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் பல சரக்கு கடைகளை இன்று செவ்வாய்க்கிழமை  முற்றுகையிட்டபோது கடை ஒன்றில் பதுக்கி வைத்திருந்த பால்மா பக்கட்டுக்கள் மீட்கப்பட்டு   நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளினால் அவ்விடத்திலேயே மக்களுக்கு விற்பணை செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்குமாகாண உதவிப் பணிப்பாளர ஆர்.எப். அன்வர் சதாத் தெரிவித்தார்.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர ஆர்.எப். அன்வர் சதாத் தலைமையிலான அதிகாரிகள் இன்று விசேட திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.

இந்த திடீர் சோதனை நடவடடிக்கை மட்டக்களப்பு நகர், இருதயபுரம், ஊறணி காத்தான்குடி,  போன்ற பிரதேசங்களில் சீமெந்து பல்மா சீனி அரிசி போன்றவற்றை பதுக்கி வைத்துள்ளமை தொடர்பாக கண்டறியும் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.  

இதன்போது காத்தான்குடி பெரிய சந்தைக் கட்டிடத்திலுள்ள பலசரக்கு கடை ஒன்றில் சோதனையின் போது அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான பால்மா பக்கட்டுக்கள் மீட்கப்பட்டு அவைகள் அவ்விடத்திலேயே மக்களுக்கு விற்பணை செய்யப்பட்டது. 

தமக்கு பொது மக்களிடத்திலிருந்து கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த வர்த்தக நிலையங்களில்; மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பு சோதனை நடவடிக்கையின் போதே குறித்த பால்மா பக்கட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11