மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு

Published By: Digital Desk 2

14 Sep, 2021 | 09:31 PM
image

தமிழகத்தில் காலியாக இருக்கும் இரண்டு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலுக்கு தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அ.தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கே.பி. முனுசாமி மற்றும் ஆர். வைத்தியலிங்கம் ஆகியோர் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றார்கள். இதனைத் தொடர்ந்து தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை  இராஜினாமா செய்தனர்.

காலியான இந்த இரண்டு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் ஒக்டோபர் 4ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அத்துடன் இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15 இல் ஆரம்பமாகி செப்டம்பர் 22ஆம் திகதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற விபரம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் வகையில் டொக்டர் கனிமொழி என் வி என் சோமு மற்றும் கே. ஆர். என். ராஜேஷ்குமார் ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுவார்கள் என கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இருவரும் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார்கள்.

இதனிடையே அ.தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முகமது ஜான் மறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட அப்துல்லா வெற்றி பெற்றார். இதனையடுத்து  மாநிலங்களவையில் திமுக  உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்தது. விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தலில் இந்த இருவரும் வெற்றி பெற்றால், மாநிலங்களவையில் தி.மு.கவின் பலம் பத்தாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

2025-11-08 15:33:48
news-image

10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை...

2025-11-08 14:08:37
news-image

இந்தோனேசியாவில் பாடசாலை மசூதியில் குண்டுவெடிப்பு ;...

2025-11-08 12:50:02
news-image

காணியை விற்ற பணத்தில் மருத்துவம் படிக்க...

2025-11-08 12:47:57
news-image

நான் இந்தியாவுக்குச் செல்வேன் - ட்ரம்ப்...

2025-11-07 16:00:42
news-image

தாய்லாந்தில் பிரபஞ்ச அழகிப் போட்டி -...

2025-11-07 15:27:34
news-image

கல்மேகி புயலின் தாக்கம் - பிலிப்பைன்ஸ்,...

2025-11-07 14:10:04
news-image

கல்மேகி புயலில் சிக்கி பிலிப்பைன்ஸில் உயிரிழந்தவர்களின்...

2025-11-07 13:42:55
news-image

உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலருக்கு சொந்தக்காரராகும்...

2025-11-07 12:38:54
news-image

ஒரு குழந்தையின் தாய் எறும்பு பயத்தால்...

2025-11-07 03:11:10
news-image

மெக்சிக்கோ ஜனாதிபதியிடம் அத்துமீறி முத்தமிட முயன்ற...

2025-11-06 13:32:30
news-image

"நிறைய இழக்க நேரிடும்" - மம்தானிக்கு...

2025-11-06 13:29:51