ரொபட் அன்டனி 

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் அரசாங்கம் டொலர்கள் வெளிச்செல்வதை குறைக்கும் முகமாக இறக்குமதி கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு வழிகளில் இந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.   

இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்படுகின்றமை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சில பொருட்களுக்கான இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது.   அதாவது இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அவற்றை அரசாங்கம் எடுக்கின்றது. 

இதற்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது நாட்டில் அந்நிய செலாவணி பற்றாக்குறையாகும்.  பொருட்களை இறக்குமதி செய்யும்போது அவற்றுக்கான கொடுப்பனவை வங்கிகள் ஊடாக  அந்நிய செலாவணி  மூலமே செலுத்த வேண்டும்.  

குறிப்பாக சொல்லப்போனால் டொலர்களின் ஊடாகவே இறக்குமதி செய்யவேண்டும்.  தற்போது டொலர்களின் பற்றாக்குறை மற்றும்  நெருக்கடி இருப்பதால் இந்த விதிமுறையும் விதிக்கப்பட்டுள்ளது.   அந்தவகையில் புதிதாக கடந்த வியாழக்கிழமை மத்திய வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டது.  

மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு 

அதாவது கையடக்க தொலைபேசிகள், தொலைக்காட்சி போன்ற இலத்திரனியல் சாதனங்கள், உடைகள், வீட்டுப்பாவனைப்பொருட்கள், பழவகைகள், ரயர் உள்ளிட்ட 623 அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்யும்போது இறக்குமதியாளர்கள் அவற்றுக்கான முழுத்தொகையையும் பணமாக வைப்புச்செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.  

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2021-09-14#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.