இலங்கை கிரிக்கெட் அணியின்  வேகப்பந்து வீச்சாளரான, லசித் மாலிங்க அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தான் ஓய்வு பெறுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

லசித் மாலிங்க : மும்பை அணியிலிருந்து ஓய்வு - FAST NEWS

38 வயதாகும் லசித் மாலிங்க கடந்த வருடம் மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்த போதிலும், தொடர்ந்தும் டி 20 போட்டிகளில் விளையாடுவதாக தெரிவித்திருந்த நிலையில், இன்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளமை கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.