எம்.மனோசித்ரா

கோட்டவில பொலிஸ் பிரிவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட அமில பிரசங்க ஹெட்டிஹேவா என்ற சன்ஷைன் சுத்தாவின் மரணம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சன்ஷைன் சுத்தாவை கொலை செய்வதற்கு உதவி வழங்கிய சந்தேகத்தின் அடிப்படையில் 38 வயதுடைய மிதிகம - அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மாத்தறை குற்ற விசாரணைப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.