இலவசக்கல்வியை இல்லாமலாக்க அரசாங்கம் நடவடிக்கை - ருவன் விஜேவர்த்தன

Published By: Digital Desk 4

14 Sep, 2021 | 03:55 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

மாணவர்கள் இணையவழியில் கல்வி கற்பதற்கு அத்தியாவசியமான உபகரணங்களின் விலை அதிகரிக்கச்செய்திருப்பதன் மூலம் அரசாங்கம் இலவசக் கல்வியின் சம உரிமையை இல்லாமலாக்கி இருக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சி பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

Articles Tagged Under: ருவன் விஜேவர்த்தன | Virakesari.lk

தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்திருக்கும் உத்தரவாத தொகை அதிகரிப்பினால் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் தொற்று நிலைமையில் மாணவர்கள் இணையவழி கல்வியையே பெற்றுவருகினறனர். இவ்வாறான நிலையில் மாணவர்களுக்கு அத்தியாவசியமான தொலை தொடர்பு உபகரணங்களின் விலை அதிகரிக்கச்செய்யும் வகையில் இறக்குமதி விதிமுறைகளை விதிப்பதன் மூலம் இலவச கல்வியின் சம உரிமையை இல்லாமலாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

மேலும் பொருளாதார பிரச்சினைக்கு மத்தியிலும் இணையவழி கல்வியை பெற்றுக்கொடுப்பதற்காக பெற்றோர்கள் மிகவும் சிரமத்துடன் தங்கள் பிள்ளைகளுக்கு கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணணிகளை கொள்வனவு செய்துகொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் தொலை தொடர்பு உபகரணங்களை அத்தியாவசியமற்ற பொருட்களில் உள்ளடக்கி, இறக்குமதி விதிமுறைகளுக்குள் உள்ளடக்கி இருக்கின்றது. அதனால் இந்த பொருட்களின் விலை இரண்டு மடங்காக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அத்துடன் எமது நல்லாட்சி அரசாங்க காலத்தில் மாணவர்களுக்கு இலவச டெப் கணணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தபோது, இன்று ஆட்சியில் இருப்பவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இலவசக்கல்வியை இல்லாமலாக்கி, வசதி குறைந்த மாணவர்களை தங்களின் கைப்பாகையாக ஆக்கிக்கொள்வதற்கான திட்டமாகவே தெரியவருகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:41:00
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11