அமைச்சர்  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அறிவுறுத்தலின் பேரில் புதிய களனி பாலம் நேற்றிரவு பரீட்சார்த்தமாக  ஒளிமயமாக்கப்பட்டது.

இலங்கையில் முதல் உயர் தொழில்நுட்ப கேபிள்களைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்படும் புதிய களனி பாலத்தை  உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கவர்ச்சியாக  ஒளிமயமாக்குமாறு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கடந்த 2021-07-04 ஆம் திகதி ஆலோசனை வழங்கியிருந்தார்.

இலங்கையின் வர்த்தக தலைநகரான கொழும்பின் அழகை மேம்படுத்த புதிய களனி பாலம் முக்கிய காரணியாக இருக்கும் என்பதால் களனி ஆற்றினதும் பாலத்தினதும் இயற்கை அழகை வெளிப்படுத்த இந்த  ஒளிமயமாக்கல் பங்களிக்கும் என  அமைச்சர் கூறினார். 

எனவே, வளர்ந்த நாடுகள் பாலங்களை அழகுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி அவை எமது நாட்டுக்கு ஏற்றதாக இருந்தால், புதிய களனி பாலத்திற்கு அந்த நுட்பங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.