இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டி-20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவதும், இறுதியுமான போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

Image

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்க அணியானது, இலங்கையுடன் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 2:1 என்ற நிலையில் கைப்பற்றியது.

அதன் பின்னர் செப்டெம்பர் 10 அன்று ஆரம்பமான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா 28 ஓட்டங்களுடன் வெற்றி பெற்றது.

செப்டெம்பர் 12 நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியிலும் தென்னாபிரிக்கா, ஒன்பது விக்கெட் மற்றும் 35 பந்துகள் மீதமிருந்த நிலையில் அபாரமாக வெற்றி பெற்றிருந்தது.

இதன்மூலம் டி-20 தொடரை பறிகொடுத்தது இலங்கை.

இந் நிலையில் இரு அணிகளுக்கிடையிலான டி-20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று மாலை 7.00 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

தொடரில் தோல்வியடைந்தாலும், இப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணத்துக்கு இலங்கை வீரர்களுக்கு அது நல்ல மன ஆரோக்கியத்தை வழங்கும்.