மூவாயிரம் வருடங்களுக்கு முந்தைய தங்க முகமூடியொன்று சீனாவின் தென்மேற்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிச்சுவான் மாகாண கலாசார பாரம்பரிய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Mandatory Credit: Photo by CHINE NOUVELLE/SIPA/Shutterstock (12435521h)
(210909) - CHENGDU, Sept. 9, 2021 (Xinhua) - Photo taken on Sept. 2, 2021 shows a golden mask discovered at the No. 3 sacrificial pit of the Sanxingdui Ruins site in southwest China's Sichuan Province. More than 500 pieces of relics have been discovered in recent months at the legendary Sanxingdui Ruins site, dazzling archaeologists with their historical value as well as the display of creativity and ingenuity.
China Sichuan Sanxingdui Ruins New Finds - 02 Sep 2021

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக் கணக்கான பாரம்பரிய நினைவுச் சின்னங்களில் இதுவும் ஒன்றாகும்.

37.2 சென்டிமீற்றர் அகலம், 16.5 செ.மீ உயரம் கொண்ட இந்த தங்க முகமூடி சிச்சுவான் மாகாணத்தின் குவாங்கனில் உள்ள சான்சிங்டி இடிபாடுகள் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது சுமார் 100 கிராம் (0.22 பவுண்டுகள்) எடையுடையது. 

ஜூன் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தங்க முகமூடி, இம் மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது கி.மு 1046 இல் முடிவுக்கு வந்த ஷாங் வம்சத்தின் பிற்பகுதியிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது.

சமீபத்திய மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 500 பாரம்பரியப் பொருட்களில் இந்த கலைப்பொருளும் ஒன்றாகும் என்று சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.