குவைட்டில்  போதைப்பொருள் வைத்திருந்த இலங்கை பெண்ணொருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த பெண் 600 போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அழகு நிலையமொன்றின் முகாமையாளர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்துள்ளதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எகிப்திய பிரஜை ஒருவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்ட பின்னர், அவர் குறித்த பெண்ணிடம்  போதைப்பொருள் இருப்பதை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனடிப்படையிலேயே குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்