2021 செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Articles Tagged Under: அஜித் நிவாட் கப்ரால் | Virakesari.lk

இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அவர் தனது கடமைகளை, இம்மாதம் 15 ஆம் திகதியன்று பொறுப்பேற்கவுள்ளார்.

பிரசித்திபெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால், இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளதோடு, சுமார் 9 வருடக் காலப்பகுதி வரை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.