வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

By T Yuwaraj

13 Sep, 2021 | 10:11 PM
image

மாத்தளை, கலேவல – மொரகொல்ல பகுதியில்  படி ரக வாகனமும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பகுதியில் இருந்து படி ரக வாகனத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு மாத்தளை நோக்கிச் சென்ற போது கலேவல – மொரகொல்ல பகுதியில் வைத்து இவ் விபத்து இன்று (13) காலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் படி ரக வாகனத்தை செலுத்திச் சென்ற வாழைச்சேனை – செம்மண்ணோடை வாஹித் வீதியைச் சேர்ந்த மூன்று வயது பெண் பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய புகாரி இர்ஷாத் என்பவர் மரணமடைந்துள்ளார்.

அத்துடன், படி ரக வாகனத்தில் பயணித்த வாகன உரிமையாளர் ஆபத்தான நிலையில் மொரொகொல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right