வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அனுமதிபத்திரமுள்ள இரண்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை திருடிய காவலாளி ஒருவர் புத்தளம் பொலிஸாரினால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

3 நாட்களுக்கு முன்னதாக புத்தளம் பாலாவி பகுதியில் உரிமையாளரின் வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியைக் காணவில்லையென தெரிவித்து புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

இதனையடுத்து முறைப்பாட்டிற்கமைய புத்தளம் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகயில் ஈடுபட்டபோது வீட்டு உரிமையாளரின் தோட்டத்தின்  காவலாளி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர் பாலாவி பகுதியைச் சேர்ந்தரென பொலிஸார் தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.